Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுக விபரம் வெளியானது

by MR.Durai
29 June 2018, 5:51 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், மேஸ்ட்ரோ எட்ஜ் , டூயட் ஸ்கூட்டர்களின் அடிப்படையில் 125சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ டூயட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களை பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹீரோ டூயட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125

ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டூயட் ஆகிய இரு ஸ்கூட்டர்களின் அடிப்படையில் 125சிசி எஞ்சின் பெற்ற மாடலை ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இரு மாடல்களும் விற்பனையில் உள்ள மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு ஸ்கூட்டர்களிலும் 8.7hp பவர் மற்றும்  10.2Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடிகியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் மிக முக்கியமாக இந்நிறுவனத்தின் எரிபொருளை சேமிக்கும் முறையான i3S (idle-start-stop tech) எனும் நுட்பத்தை கொண்ட மாடலாக வரவுள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை பெற்ற மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு, வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி, சர்வீஸ் இன்டிகேட்டர், சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர் போன்றவற்றுடன் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான ஸ்டைலை பெற்றுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கொண்ட வேரியண்ட் விற்பனை செய்யப்படுகின்றது.

மெட்டல் பாடி பெற்ற ஹீரோ டூயட் 125 ஸ்கூட்டரில் டிரம் பிரேக்குடன், எல்இடி டெயில் விளக்கு, வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி, சர்வீஸ் இன்டிகேட்டர், சைட் ஸ்டேன்ட் இன்டிகேட்டர் போன்றவற்றுடன் கிடைக்கப் பெறுகின்றது.

அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் விலை ரூ. 54,500 மற்றும் ஹீரோ டூயட் 125 விலை ரூ 52,000 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

Related Motor News

நைட்ஸ்டெர் 440 க்ரூஸைரை வெளியிடும் ஹார்லி-டேவிட்சன்

பிப்ரவரி 2025ல் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதலிடத்தில்..!

56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

ஏதெர் எனர்ஜியில் முதலீட்டை அதிகரிக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

முதல் ஹீரோ மோட்டோகார்ப் பிரிமியா ஷோரூம் திறப்பு

இந்தியாவில் ஜீரோ எலக்ட்ரிக் பைக்கினை வெளியிட தயாராகும் ஹீரோ மோட்டோகார்ப்

Tags: Hero Duet 125Hero MotoCorp
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 yamaha r15 v4 bike

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

TVS Ntorq 150 scooter

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

5,145 ஜிக்ஸர் 250 பைக்குகளை திரும்ப அழைத்த சுசுகி மோட்டார்சைக்கிள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan