உலகின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹீரோ பேஸன் ப்ரோ i3S பைக் அறிமுகம் செய்யப்பட்டு நிலையில் கூடுதலாக பேஸன் எக்ஸ்ப்ரோ மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் ஆகிய இருமாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ பேஸன் ப்ரோ i3S பைக்

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மாடலை தொடர்ந்து மாபெரும் வெற்றி பெற்ற மாடல்களில் ஒன்றாக திகழும் பேஸன் பைக் வரிசை 2001 ஆம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை பெற்றதாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக் பல்வேறு தோற்ற மாறுதல்களுடன் நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள நிலையில் புதிய பெட்ரோல் டேங்க், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கு, இருக்கை அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதி மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட் உட்பட புதிய டிஜிட்டல் அடலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு டிஜிட்டல் எரிபொருள் கேஜ், ட்ரீப் மீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக புதிய பேஷன் ப்ரோ பைக் வெளியாகியுள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் i3s நுட்பத்தை பெற்ற 110சிசி TOD (Torque on Demand) எஞ்சின் அதிகபட்சமாக 9.4 bhp பவருடன், 9 Nm டார்க்கினை வழங்கும்,இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேஸன் ப்ரோ மிக சிறப்பான மைலேஜ் மற்றும் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட 12 சதவீத கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு பிரேக் தேர்வுகளிலும் கிடைக்க உள்ள ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் கிரே ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

வருகின்ற ஜனவரி 2018 முதல் வாரத்தில் 2018 ஹீரோ பேஸன் ப்ரோ பைக் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் விலை விபரம் அடுத்த வார இறுதியில் வெளியாக உள்ளது.

மேலும் படிங்க

2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ பைக் அறிமுகம் முழுவிபரம்

2018 ஹீரோ சூப்பர் ஸ்பிளென்டர் பைக் அறிமுகம் முழுவிபரம்