ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் எலக்ட்ரிக் மாடலை EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வெளிப்படுத்த உள்ளதால் விற்பனைக்கு அடுத்த ஆண்டு துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
இன்றைக்கு வெளியிட்டுள்ள டீசர் மூலம் எலக்ட்ரிக் அட்வென்ச்சரை உறுதி செய்திருப்பதுடன் சர்வதேச சந்தைகளில் விடா வி1 புரோ ஸ்கூட்டரும் வெளியாக உள்ளது.
Vida Electric Adventure Bike
டீசர் மூலம் வெளிவந்துள்ள ஆஃப் ரோடு சாகசங்களுக்கான அட்வென்ச்சர் பைக் முற்றிலும் முழுமையான சாகச பயணங்களுக்கு ஏற்றதாக விளங்கலாம் என தெரிகின்றது. பொது சாலைகளில் பயன்படுத்த இயலுமா அல்லது ஆஃப் ரோடில் மட்டும் பயன்படுத்தும் வகையிலான மாடலா என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
விடா V1 Pro மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ -110 கிமீ வரை கிடைக்கும். இதுதவிர, ஒற்றை இருக்கை பெற்ற வி1 புரோ கூபே ஸ்டைல் வெளியாகலாம்.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 160 அட்வென்ச்சர் ஸ்கூட்டர், ஜூட் 125 ஸ்கூட்டர், 440சிசி பைக்குகள், மற்றும் விடா பிராண்டு மாடல்களும் EICMA 2023-ல் வெளியாகும்.