
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்ட் விடா கீழ் வரவுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பெயரை புராஜெக்ட் VXZ என அழைக்கப்படுவதாக முதல் டீசரை வெளியிட்டுள்ளது. முன்பாக யூபெக்ஸ் என அறியப்பட்ட டீசர் ஆனது அட்வென்ச்சர் ஸ்டைல் என உறுதிப்படுத்தி புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
விடா இந்திய சந்தையில் தற்பொழுது ஸ்கூட்டர்களை மட்டுமே வி்ற்பனை செய்து வரும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக்கின் டீசரில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டதாக அமைந்துள்ள நிலையில் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கலாம்.
எல்இடி புராஜெக்டர் ஹைட்லைட்டினை பெற்று V வடிவத்தை ரன்னிங் விளக்கு மிக நேர்த்தியாக அமைந்துள்ள நிலையில், பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.
ஏரோடைனமிக்ஸ் சார்ந்த வடிவமைப்புடன் 250-500cc க்கு இணையான ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் எலக்ட்ரிக் பைக்காக விடா முழுமையான தகவல்களை EICMA 2025 அரங்கில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட உள்ளது.
 




