மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 110 ஸ்கூட்டர் மாடல் மிக சிறப்பான வசதிகளுடன் ஸ்கூட்டரின் நிறைகளும், குறைகளும் சோதனை செய்ததில் கிடைத்தவற்றை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
110cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் கொண்டுள்ள ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் என்ஜின் 7250RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 8 bhp பவர், 5750 RPM-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஹீரோ Xoom நிறைகள்
- மிக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து போட்டியாளரான டியோ ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.
- 110cc என்ஜின் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்துகின்றது.
- எல்இடி விளக்குகளுடன் , எல்இடி டையில் லைட் கொண்டு 12 அங்குல வீல் நல்ல ஒரு அம்சமாக உள்ளது.
- இரவு நேரங்களில் வளவுகளை உள்ள பிளைன்ட் ஸ்பாட்டில் உள்ளவற்றை அறிய கார்னரிங் லேம்ப் உள்ளது.
- ஜூம் ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ முதல் 50 கிமீ வரை வழங்குகின்றது.
- i3s, ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் வரவேற்பினை பெறும்.
ஹீரோ Xoom குறைகள்
- 70 கிமீ வேகத்திற்கு மேல் பயணிக்கும் பொழுது லேசான அதிர்வுகள் கைப்பிடிகளில் மற்றும் ஃபூட் போர்டில் உணர முடிகின்றது.
- வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி இல்லை என்பது ஒரு முக்கியமான குறையாகும்.
- பிரேக்கிங் திறன் சிறப்பாக இருந்தாலும், இன்னு சற்று மேம்பட்டதாக இருந்திருக்கலாம்.
- பிளாஸ்டிக் பாகங்களின் தரத்தை சற்று மேம்படுத்தியிருக்கலாம்.
ஹீரோ ஜூம் ஸ்கூட்டருக்கு போட்டியாக ஹோண்டா டியோ, ஆக்டிவா 6ஜி, மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்றவை விற்பனையில் கிடைக்கின்றது.
ஹீரோ ஜூம் ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை எவ்வளவு ?
ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் ஸ்கூட்டர் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 87,856 முதல் ₹ 96,878 ஆகும்
ஹூரோ ஜூம் பவர் & டார்க் விபரம் ?
ஜூம் 110 ஸ்கூட்டர் என்ஜின் 7250RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 8 bhp பவர், 5750 RPM-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும்.