ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.28 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
முந்தைய 2 வால்வு பெற்ற 199.6சிசி ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் தற்போது 4 வால்வுகளை கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருப்பதுடன் கூடுதலாக 19.1hp பவர் மற்றும் 17.35Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. முன்பாக 2 வால்வுகளை பெற்ற மாடல் 18.1hp மற்றும் 16.45Nm வெளிப்படுத்தியது.
புதிய மாடல் முந்தைய எக்ஸ்பல்ஸ் 200 மாடலை போன்றே அமைந்துள்ளது. ஒரே வித்தியாசம் பெட்ரோல் டேங்கில் 4V ஸ்டிக்கர் உடன் கூடுதலாக ட்ரெயில் ப்ளூ, பிளிட்ஸ் ப்ளூ மற்றும் ரெட் ரெய்டு ஆகியவற்றை பெற உள்ளது.
190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டதாகவும், நேவிகேஷன் ஆதரவுடன் வந்துள்ளது.