Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக் விற்பனைக்கு வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 23,January 2024
Share
2 Min Read
SHARE

hero xtreme 125r

Contents
  • Hero Xtreme 125R
    • Hero Xtreme 125R Price list

125cc சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ள எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் விலை ரூ.95,000 முதல் துவங்குகின்றது.

125சிசி சந்தையில் உள்ள பல்சர் NS125, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹோண்டா SP 125 உள்ளிட்ட பைக்குகளுடன் ஷைன் 125, பல்சர் 125, கிளாமர் 125 ஆகியவற்றையும் எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

Hero Xtreme 125R

இன்றைக்கு நடைபெற்ற ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் வெளியான புதிய மாடல் நாம் பிரத்தியேகமாக வெளியிட்ட  ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மேம்பட்ட புதிய ஸ்பிரின்ட் EBT 124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 0-60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் மைலேஜ் 66 kmpl (WMTC BS VI – Worldwide Harmonized Motorcycle Test Cycle) தோனை முறையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

hero xtreme 125r

டைமண்ட் சேஸ் கொடுக்கப்பட்டு ஸ்விங்கார்ம் டியூப்லர் முறையில் ஃபேபரிக்கேட் செய்யப்பட்டு பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் மற்றும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது.

More Auto News

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டில் புதிய வண்ணம்
புதிய ஹோண்டா ட்ரீம் யுகா எச்இடி
மார்ச் 31 வரை.., ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சலுகை நீட்டிப்பு
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V விற்பனைக்கு எப்பொழுது ?
கவாஸாகி நின்ஜா ZX – 14R பைக் வெள்ளை நிறத்திலும்

பிரேக்கிங் அமைப்பில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் என இருவிதமான முறையில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் முன்புறத்தில் 272 mm டிஸ்க் (ABS) அல்லது 240 mm டிஸ்க் (CBS) பெற்று பின்புறத்தில் 130 mm டிரம் பிரேக் கொண்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர் பெற்றுள்ள முன்பக்கம் 90/90-17 மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் 120/80-17 உள்ளது.

hero xtreme 125r colour

ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை தட்டையான எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் அதன் மேற்பகுதியில் எல்இடி ரன்னிங் விளக்குடன், எக்ஸ்ட்ரீம் பேட்ஜ் பெட்ரோல் டேங்க் மீதும் அதன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் 125R பேட்ஜ், ஸ்பிளிட் இருக்கை பெற்று ஸ்பிளிட் கிராப் ரெயில் கொண்டு பின்புறத்தில் டயர் ஹக்கர் உள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. பல்வேறு ஸ்டைலிஷ் அம்சங்களுடன் வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 125R Price list

  • Xtreme 125R IBS ₹ 95,000
  • Xtreme 125R ABS ₹ 99,500

(EX-showroom)

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது
2019 ஹோண்டா CBR650R ரூ.7.70 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்
ரூ.10000-க்கு மேற்பட்ட சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ள வெஸ்பா மற்றும் ஏப்பிரியா ஸ்கூட்டர்கள்
யெஸ்டி அட்வென்ச்சரில் மவுன்டெயின் பேக் ஆக்சசெரீஸ்
பி.எஸ் 3 பைக்குகள் ஸ்டாக் இல்லையா..?
TAGGED:Hero Xtreme 125R
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ மேவ்ரிக் 440
Hero Motocorp
ஹீரோ மேவ்ரிக் 440 விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
rayzr 125 cyan blue
Yamaha
யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
2024 hero glamour 125
Hero Motocorp
2025 ஹீரோ கிளாமர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved