Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் வேரியண்ட் விபரம்

by automobiletamilan
June 16, 2023
in பைக் செய்திகள்
3
SHARES
0
VIEWS
ShareRetweet

xtreme 160r variants explained

புதிதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் சக்திவாய்ந்த என்ஜின் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாக ஸ்டார்ண்டர்டு, கனெக்டேட் மற்றும் புரோ என மூன்று விதமான வேரியண்டிற்கான வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.

மிகவும் சவாலான 160சிசி சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் டிசைனில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

2023 Hero Xtreme 160R 4V Variants Explained

மிக வேகமான மாடலாக விளங்கும் எக்ஸ்ட்ரீம் மூன்று வேரியண்டுகளிலும் பொதுவாக 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. அனைத்து வேரியண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.

ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

xtreme 160r 4v blazing red

Xtreme 160R 4V STD

ஆரம்பநிலை வேரியண்டாக உள்ள எக்ஸ்ட்ரீம் 160R 4V டபுள் டிஸ்க் மாடல் தொடர்ந்து 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்று ஒற்றை இருக்கையுடன் புதிதாக பிளேசிங் ஸ்போர்ட்ஸ் சிவப்பு மற்றும் மேட் ஸ்லாட் கருப்பு என இரு நிறங்களை கொண்டுள்ளது. இந்த மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,27,300 ஆகும்.

xtreme 160r 4v price

Xtreme 160R 4V Connected

STD வேரியண்டின் வசதிகளுடன் கூடுதலாக இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ப்ளூடூத் இணைப்புடன் ஹீரோவின் டெலிமாடிக்ஸ் அம்சத்தை ஹீரோ கனெக்ட் 2.0 என்ற பெயரில் பெற்றுள்ளது. டெலிமாடிக்ஸ் செயல்பாடுகள் வாகன கண்காணிப்பு, இம்மொபைல்சேஷன், வாகனம் கண்டறிதல், பேனிக் எச்சரிக்கை, அவசரகால எச்சரிக்கை, ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் மற்றும் பலவற்றை பெற்றுள்ளது.

கனெக்டேட் மாறுபாடு ஒற்றை மேட் ஸ்லேட் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்ட் மற்றும் கனெக்டட் ஆகியவற்றிற்கு 144 கிலோ கிராம் உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 132,800 ஆகும்.

hero-xtreme-160r-4v

Xtreme 160R 4V Pro

டாப் வேரியண்ட் ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி புரோவில் கோல்டு நிறத்திலான 37 mm KYB அப்சைடு டவுன் ஃபோர்க், ஸ்பிளிட் இருக்கையுடன் வருகிறது. முந்தைய கனெக்டேட் வேரியண்டின் மற்ற வசதிகளை பெறுகின்றது. மற்ற இரண்டு வகைகளை விட எடை கூடுதலாக 145 கிலோ உள்ளது.

இதன் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 136,500 ஆகும். இந்த வேரியண்டில் மேட் ஸ்லேட் பிளாக் அல்லது ஒரு நியான் ஷூட்டிங் ஸ்டார் என இரண்டு நிறங்களை தேர்வு செய்யலாம்.

hero xtreme 160r 4v launched

2023 Hero Xtreme 160R 4V On-road Price in Tamil Nadu

  • Xtreme 160R 4V STD – ₹ 1,50,110
  • Xtreme 160R 4V Connected – ₹ 1,56,501
  • Xtreme 160R 4V Pro – ₹ ₹ 160,570

(விலை மாறுதலுக்கு உட்பட்டது)

இந்த பைக்கிற்கு போட்டியாளர்களாக எக்ஸ்ட்ரீம் 160ஆர், பஜாஜ் பல்சர் N160, பல்சர் NS160, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160R 4V, அப்பாச்சி RTR 160 2V, யமஹா FZ-S FI, மற்றும் சுசூகி ஜிக்ஸர் ஆகியவை உள்ளன.

Tags: Hero Xtreme 160R 4V
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan