Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்

by automobiletamilan
May 24, 2018
in பைக் செய்திகள்

பிரிமியம் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் 200சிசி பைக் மாடலாக அறிமுகம் செய்ய உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் மாடல்க்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல் , சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது விற்பனைக்கு வெளியாகுவதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் அதிகார்வப்பூர்வ முன்பதிவு உறுதி செய்யப்படாத நிலையில், டீலர்கள் வாயிலாக ரூ.1000 முதல் ரூ.5000 வரை டீலர்களை பொருத்து முன்பதிவு கட்டணம் வித்தியாசப்படலாம்.

பிரிமியம் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் பல்வேறு கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தி வந்த நிலையில் முதல் மாடலாக எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக்கில் இடம்பெற உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

முன்புறத்தில் 37 மிமீ கொண்ட ஃபோர்க்குகளுடன் டயரில் 276 மிமீ கொண்ட டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக் அப்சார்பரை பெற்று டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்குடன், கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட உள்ளது. முன்புறத்தில் 17 அங்குல வீலுடன் 100/80 ரேடியல் டயருடன் பின்புறத்தில், 130/70  டயர் பொருத்தப்பட்டுள்ளது.

200சிசி சந்தையில் நிலவி வரும் மிக கடுமையான போட்டடியை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் போட்டியாளர்கள், டிவிஎஸ் அப்பாச்சி 200, பஜாஜ் பல்சர் 200NS ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்ட்ரீம் 200 ஆர் பைக் சுசூகி ஜிக்ஸெர், ஹார்னெட் 160ஆர் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கின் விலை ரூ. 88,000 முதல் ரூ.98,000 வரை அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விற்பனைக்கு மே மாத முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

Tags: Hero BikeHero MotoCorpHero Xtreme 200RXtreme 200Rஹீரோ எக்ஸ்ட்ரீம் 200Rஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்ஹீரோ மோட்டோகார்ப்
Previous Post

20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS

Next Post

சுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு

Next Post

சுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version