இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் முதன்முறையாக இந்திய சந்தையில் 50, 08,103 அலகுகளை விற்பனை செய்து புதிய சாதனையை 16-17 நிதி ஆண்டில் படைத்துள்ளது.
ஹோண்டா விற்பனை
நமது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளாரான ஹோண்டா தனது 2016-2017 ஆம் நிதி வருடத்தின் முடிவில் 50, 08,103 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதனை கடந்த 15-16 நிதி ஆண்டில் ஒப்பீடுகையில் கூடுதலாக 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 15-16 வருடத்தில் 44, 83,462 ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.
2016-2017 நிதி ஆண்டில் விற்பனை செய்யபட்டுள்ள 50.08 லட்சம் வாகனங்களில் 33,51,604 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 15-16 ஆண்டைவிட 16 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். 15-16ல் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டரின் எண்ணிக்கை 28,92,480 ஆகும்.
FY 2016-17 | FY 2015-16 | வளர்ச்சி |
---|---|---|
50, 08,103 | 44, 83,462 | 12% |
மார்ச் மாத விற்பனை விபரம் விரைவில்