பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜின் பெற்ற ஹோண்டா ஆக்டிவா 125 Fi விற்பனைக்கு வெளியிடப்பட்ட நாள் முதல் தற்போது வரை 25,000க்கு மேற்பட்ட ஸ்கூட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டா எஸ்பி 125 அறிமுகத்தின் போது இந்நிறுவன இந்திய தலைவர் மினோரு கட்டோ குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைக்கு வெளியிடப்பட்ட பிஎஸ்6 என்ஜின் பெற்ற புதிய ஹோண்டா SP125 பைக்கின் அறிமுகத்தில் பேசிய இந்நிறுவன இந்திய தலைவர் கூறுகையில், எங்கள் முதன்மை மாடலான ஆக்டிவா இந்தியாவின் மிகவும் விருப்பமான இரு சக்கர வாகன பிராண்டாக முன்னணியில் இருந்து வருகின்றது. இந்தியாவின் முதல் வெகுஜன பிரிவு BS-VI இரு சக்கர வாகனம், புதிய ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI, ஒரு சிறந்த சந்தை பங்களிப்பை பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 25,000 வாடிக்கையாளர்கள் புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125 (Standard & Drum) – ரூ.67,490
ஹோண்டா ஆக்டிவா 125 (Alloy & Drum) – ரூ.70,990
ஹோண்டா ஆக்டிவா 125 (Deluxe & Disc) – ரூ.74,490
(டெல்லி எக்ஸ்ஷோரூம்)
மேலும் படிங்க – ஹீரோ ஸ்ப்ளெண்ட்ர் ஐஸ்மார்ட் பிஎஸ்6 விலை விவரம்