அதிகம் விற்பனை ஆகின்ற 125சிசி பைக்குகளில் ஒன்றான ஹோண்டா ஷைன் மாடலின் பிஎஸ் 6 அல்லது பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான பவர் விபரம் கிடைத்துள்ளது. மேலும் இந்த மாடலின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மற்ற இரு சக்கர வாகனங்களில் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும்போது பவர் கணிசமாகக் குறைந்திருந்த நிலையில், சிபி ஷைன் எஸ்பி மாடலின் பவர் 0.03 ஹெச்பி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முந்தைய 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. பிஎஸ் 4 மாசு உமிழ்வு என்ஜின் அதிகபட்சமாக 10.57 ஹெச்பி வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.
சிபி ஷைன் பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1,285மிமீ ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக்கின் நீளம் 13 மிமீ அதிகரிக்கப்பட்டு, 2020 மிமீ ஆக உயர்ந்துள்ளது. அடுது பைக்கின் அகலம் 23 மிமீ உயர்த்தப்பட்டு, 785 மிமீ ஆகவும், அதேவேளை, பைக்கின் உயரம் 82 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.
இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் என மொத்தமாக நான்கு மாறுபட்ட வேரியன்டில் வெளியாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ் 6 ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வெளியிடப்பட்ட நிலையில், ஹோண்டாவின் அடுத்த பிஎஸ் 6 மாடலாக சிபி ஷைன் விளங்க உள்ளது.
உதவி – indianautosblog