Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

Honda CB300R : ரூ. 2.41 லட்சத்தில் ஹோண்டா சிபி 300ஆர் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
February 8, 2019
in பைக் செய்திகள்

இந்தியாவின் மோட்டார் சைக்கிள் சந்தையில் புதிய வரவாக ஹோண்டா சிபி 300ஆர் பைக்கினை ரூ. 2.41 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஹோண்டா விங் வோர்ல்டு டீலர்கள் வாயிலாக கிடைக்கின்றது.

அதிகரித்து வரும் பிரிமியம் ரக மாடல்களின் விற்பனை முன்னோக்கி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், மிகவும் சவாலான 250சிசி-500சிசி சந்தையில் மிகவும் நேர்த்தியான நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே ரக மாடலை ஹோண்டா சிபி 1000ஆர் பைக்கின் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட சிபி 300ஆர் மாடலின் விற்பனையை நம் நாட்டில் தொடங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்நிறுவனத்தின் 22 பிரத்தியேக பிரிமியம் டீலர்களான விங் வோர்ல்டு மூலம் முன்பதிவு செய்யபட்டு வந்தது. அடுத்த மூன்று மாதம் உற்பத்தி செய்யப்பட உள்ள பைக்குகளுக்கான விற்பனை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. முன்னதாக 13 நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிபி 300ஆர் பைக் இந்தியாவிலும் வெளியாகியுள்ளது.

ஹோண்டா சிபி 300ஆர்

சிபி 300ஆர் பைக்கின் மீதான ஈர்ப்பினை மிக இலகுவாக பெறும் வகையில் அமைந்துள்ள கிளாசிக் ரக வட்ட வடிவிலான ஹெட்லைட்டில் இடம்பெற்றுள்ள எல்இடி விளக்குகள் நவீனத்துவத்தை பெற்று விளங்குகின்றது.  மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தை வெளிப்படுத்தும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்று குறைந்த ஃபேரிங் பேனல்களுடன் விளங்குகின்றது.

க்ரோம் கவரை பெற்ற மேல்நோக்கிய சைலன்சர், இருபிரிவுகளை கொண்ட இருக்கை அமைப்பு மேல் எழும்பிய பின்புற டெயில் பகுதி போன்றவை இந்த வாகனத்தின் கவர்ச்சிக்கு பலம் சேரக்கின்றது.

சிபி 300ஆர் பைக்கில் மிகவும் பவர்ஃபுல்லான 286 சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 30 hp பவர் மற்றும்  27.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. (சர்வதேச மாடல்களில் 31 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்றது.)

ஹோண்டா CB 300R பைக்கில் சராரியாக லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கில் 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்று முன்புறத்தில் மிகவும் ஸ்டைலிஷான வடிவமைப்பை வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை ஹோண்டா பீக் ஹோல்ட் ஃபங்ஷன் என அழைக்கின்றது. இதன் மூலம் கியர் ஷிஃபடிங் பொசிசன், ஸ்பிட் , வார்னிங் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களை அறிய உதவுகின்றது.

147 கிலோ கிராம் எடையை கொண்டுள்ள இந்த பைக்கில்  41 மிமீ USD ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.  சிபி 300ஆரில் 4 பிஸ்டன்களை பெற்ற 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அனைத்து விதமான ரைடிங் நேரத்திலும் சிறப்பாக இயங்க ஐஎம்யூ இடம்பெற்றுள்ளது.

CB 300R பைக்கில் மேட் ஆக்சிஸ் மெட்டாலிக் கிரே மற்றும் க்ரோமோஸ்பியர் ரெட் என இரு நிறங்களை பெற்றிருக்கின்றது.  இந்த டூ -வீலரின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் தொழிற்சாலை வாயிலாக ஒருங்கினைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதன் காரணமாகவே விலை சற்று குறைவாக உள்ளது.

ஹோண்டா சிபி 300ஆர் பைக் விலை ரூ. 2.41 லட்சம் ஆகும்.

Tags: HondaHonda CB300Rhonda cb300r price in chennaiஹோண்டா CB 300Rஹோண்டா சிபி300ஆர்
Previous Post

Bajaj : 2019 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் முன்பதிவு துவங்கியது

Next Post

ஹோண்டா ஜாஸ், அமேஸ், WR-V கார்களில் சிறப்பு பதிப்பு அறிமுகம்

Next Post

ஹோண்டா ஜாஸ், அமேஸ், WR-V கார்களில் சிறப்பு பதிப்பு அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version