ஜப்பானில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா சிடி125 ஹன்டர் காப் இந்நிறுவனத்தின் விலையுர்ந்த 125சிசி மாடலாக விளங்குகின்றது. ஜப்பானில் 440,000 யென் (தோராயமாக ரூ.3,00,000) ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
CT125 மாடலில் பொருத்துவதற்கு காற்றினால் குளிரூட்டப்பட்ட, OHC, ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7,000rpm-ல் வெளிப்படுத்தும் 8.8hp பவரும் 4,500rpm-ல் 11Nm டார்க்கினை வழங்குகின்றது. இந்த மோட்டார் சைக்கிளில் 4 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் உள்ளது. 120 கிலோ எடையுடன் விளங்குகின்ற இந்த மொபட் ஆஃப் ரோடு சாலைக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சி.டி 125 தற்போது ஜப்பானில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில மாதங்களில் சர்வதேச சந்தைகளுக்கு விற்பனைக்கு செல்ல உள்ளது. நிச்சயமாக இந்தியாவுக்கு விற்பனைக்கு கொண்டு வர வாய்ப்பில்லை.