முக்கிய குறிப்பு
125சிசி ஸ்கூட்டர் மாடலாக எதிர்பார்க்கப்படுகின்ற மிகவும் ஸ்டைலிஷான ஹோண்டா கிரேசியா 125 ஸ்கூட்டரின் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த டீசரில் மிகவும் ஸ்டைலிஷான அம்சங்கள் உட்பட பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற்றதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரேசியா என்ற பெயரை ஹோண்டா உறுதி செய்யப்படாமல் வெளியிட்டுள்ள இந்த டீசர் தற்போது சந்தையில் உள்ள டிவிஎஸ் என்டார்க் 125, சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட், ஏப்ரிலியா எஸ்ஆர் 125, ஸ்ட்ராம் 125 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வடிவமைப்பினை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அனேகமாக புதிய ஹோண்டா ஸ்கூட்டரில் இந்நிறுவனத்தின் ஆக்டிவா 125 இன்ஜின் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இந்த இன்ஜின் சற்று ரீட்யூன் செய்யப்பட்டு சிறப்பான செயல்திறன் மிக்கதாக விளங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது.
முழுமையான டிஜிட்டல் கன்சோலை பெற உள்ள இந்த புதிய மாடலில் மூன்று ஸ்டெப் ஈக்கோ ஸ்பீடு இன்டிகேட்டர், இருபுறங்களிலும் பார் டைப் டாக்கோமீட்டர், கடிகாரம், நிகழ் நேர எரிபொருள் இருப்பிற்கான மைலேஜ், இரண்டு டிரீப்மீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன், 10 அங்குல பின்புற அலாய் வீல் மற்றும் 12 அங்குல அலாய் வீல் முன்புறமும், ஸ்டைலிஷான எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டிருக்கும்.
புதிய ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டர் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் ரூ.72,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…