விற்பனையில் சாதனை படைக்கும் ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்

0

honda grazia scooterஇந்தியாவின் ஸ்கூட்டர் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 75 நாட்களில் 50,000 ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்

honda grazia scooter led headlamp

Google News

கடந்த நவம்பர் மாத தொடக்க வாரத்தில் இந்தியாவில் ரூ.60,277 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா கிரேஸியா மாடலுக்கு அமோகமான வரவேற்பினை சந்தையில் பெற்று விளங்குகின்றது.

நகர்புற மக்களுக்கு ஏற்ற வகையிலான அம்சங்களை பெற்று விளங்கும் கிரேஸியா ஸ்கூட்டரில், ஹெச்இடி நுட்பத்தை பெற்ற 8.52 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.9 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.54 Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கின்றது.

தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான வி வடிவ அமைப்பில் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக நவீனத்துவமான அம்சங்களுடன் 4 விதமான லாக்கர்களை திறக்க வகையிலான ஸ்மார்டர் லாக் வழங்கப்பட்டிருப்பதுடன், மொபைல் போன் வைப்பதற்கான யூட்டிலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.

honda grazia scooter teaser

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 12 அங்குல வீல் பெற்றுள்ள கிரேசியா மாடலில் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக் அல்லது 130 மிமீ டிரம் பெற்றதாகவும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் அம்சத்துடன் காம்பி பிரேக் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 21 நாட்களில் 15,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்த நிலையில், இரண்டரை மாதங்களில் 50,000 என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள கிரேஸியா மாடல், டிசம்பர் மாத விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது.