Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா ஹெச்’நெஸ் சிபி 350 பைக் போட்டியாளர்களை விட சிறந்ததா ?

by MR.Durai
9 October 2020, 7:36 am
in Bike News
0
ShareTweetSendShare

707ea honda hness cb350 vs royal enfield classic 350 vs benelli imperiale 400 vs jawa

இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தை பெற்ற ஹோண்டா ஹெச்’நெஸ் சிபி 350 பைக்கினை நேரடியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42, பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை தொடர்ந்து ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.

ஹோண்டா சிபி 350 பைக்கின் நேரடியான போட்டியாளராக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் போன்ற மாடல்கள் இந்தியாவின் ராஜாவாக 97 சதவிகித சந்தை மதிப்பையும், சர்வதேச அளவில் 50 சதவிகிதத்துக்கும் கூடுதலான சந்தை பங்களிப்பை நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் பெற்றுள்ளது.

இன்ஜின் 

இந்த பிரிவில் குறைவான சிசி இன்ஜின் பெற்ற மாடலாக ஜாவா மற்றும் ஜாவா 42 விளங்குகின்றது. ஆனால் அதிகப்படியான பவரை ஜாவா 42 மாடல் 26.5 ஹெச்பி வரை வழங்குகின்றது. டார்க்கினை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹைனெஸ் சிபி 350 மாடல் 30 என்எம் வரை வழங்குகின்றது. இந்த பிரிவில் 6 வேக கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஜாவா பெறுகின்றது. மற்ற மாடல்கள் 5 வேக கியர்பாக்ஸ் பெறுகின்றன. முழமையான ஒப்பீட்டு அட்டவனை தொகுப்பினை கீழே கானலாம்.

Honda H’Ness CB 350 Royal Enfield Classic 350 Jawa/Jawa 42 Benelli Imperiale 400
இன்ஜின் 348.36cc, single-cylinder, air-cooled 346cc, single-cylinder, fuel-injected 293cc, single-cylinder, liquid-cooled 374cc, single-cylinder, air-cooled
பவர் 21.1hp at 5500rpm 19.1hp  5250rpm 26.5hp 21hp at 6000rpm
டார்க் 30Nm at 3000rpm 28Nm at 4000rpm 27.05Nm 29Nm at 3500rpm
Power-to-weight ratio 116.57hp/tonne 97.94hp/tonne 154.06hp/tonne 102.43hp/tonne
கியர்பாக்ஸ் 5-speed 5-speed 6-speed 5-speed

 

37906 honda hness cb 350

டிசைன்

இந்தியளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களுக்கு உள்ள தனித்துவமான கிளாசிக் அடையாளத்தை எதிர்கொள்ள வேண்டிய ஹோண்டா நிறுவனம் தனது சிபி 1100 பைக்கின் உந்துதலை எடுத்துக் கொண்டு இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைத்துள்ளது.

வட்ட வடிவத்திலான ஹெட்லைட், நீளமான டேங்க், ஒற்றை இருக்கை ஆப்ஷன் என மிக நேர்த்தியாகவும், வட்ட  வடிவ கிளஸ்ட்டரில் நவீனத்துவமான ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை இந்த பிரிவில் முதன்முறையாக பெறும் மாடலாக விளங்குகின்றது. எல்இடி ஹெட்லைட் மிகவும் நவீனத்துவமாக அமைந்துள்ளது.

மற்றபடி கிளாசிக் 350 தொடர்ந்து ரெட்ரோ ஸ்டைலை பெற்று பல்வேறு நிறங்களை கொண்டு விளங்குகின்றது. இரு பிரிவுகளை கொண்ட இருக்கையை பெற்று விளங்குகின்றது.

a054a royal enfield classic 350 bs6

ஜாவா பைக்குகளும் ரெட்ரோ ஸ்டைலை கொண்டு பெரும்பாலான இடங்களில் க்ரோம் பாகங்களை கொண்டு விளங்குகின்றது. இரண்டு புகைப்போக்கியை பெற்று ஜாவா ரெட்ரோ தோற்ற அமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெனெல்லி இம்பீரியல் 400 மாடல் கிளாசிக் பைக்கினை போலவே இரு பிரிவு இருக்கைகளை பெற்று ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ளது.

மற்ற நுட்ப விபரங்கள்

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் தயாரிப்பு நிலையில் உள்ளதால் பல்வேறு மாற்றங்கள் பெற்று அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வரவுள்ளது. தற்போது உள்ள பிஎஸ்-6 மாடல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது.

c9aef jawa forty two price

ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளும் டூயல் சேனல் மற்றும் சிங்கிள் சேனல் ஆப்ஷனை பெற்று டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வடிவமைகப்பட்டுள்ளது. புதிய ஹைனெஸ் சிபி 350 மாடல் டபுள் கார்டிள் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. மற்றவற்றை முழுமையாக அட்டவனையில் ஒப்பீட்டு காணலாம்.

Honda H’Ness CB 350 Royal Enfield Classic 350 Jawa/Jawa 42 Benelli Imperiale 400
ஃபிரேம் ஹாஃப் டூப்ளெக்ஸ் கார்டிள் சிங்கிள் டவுன் ட்யூப் டபுள் கார்டிள் ஃபிரேம் டபுள் கார்டிள்
எடை (kerb) 181kg 195kg 172kg 205kg
கிரவுண்ட் கிளியரண்ஸ் 166mm 135mm NA 165mm
வீல்பேஸ் 1441mm 1390mm 1369mm 1440mm
முன் பிரேக்  310mm disc 280mm disc 280mm disc 300mm disc
பின் பிரேக்  240mm disc 240mm disc 153mm drum / 240mm disc 240mm disc
முன்புற சஸ்பென்ஷன்  Telescopic fork Telescopic fork Telescopic fork Telescopic fork
பின்புற சஸ்பென்ஷன் Twin shock absorbers Twin shock absorbers Twin shock absorbers Twin shock absorbers
முன் டயர் 100/90-19 90/90-19 90/90-18 100/90-19
பின் டயர் 130/70-18 110/90-18 (tube) / 120/80-18 (tubeless) 120/80-17 130/80-18
எரிபொருள் 15 லிட்டர் 13.5 லிட்டர் 14 லிட்டர் 12  லிட்டர்

 

விலை ஒப்பீடு

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.85 லட்சம் துவங்கி அதிகபட்சமாக DLX புரோ வேரியண்டின் விலை ரூ.1.90 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஜாவா பைக் விலை முறையே ரூ.1.74 லட்சம் முதல் ரூ.1.83 லட்சம் வரையும், மற்றும் ஜாவா 42 விலை ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.74 லட்சம் வரை அமைந்துள்ளது.

Related Motor News

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா CB350 வரிசை விற்பனைக்கு வெளியானது

ஜாவா பைக்குகளின் விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வந்தது

இந்த பிரிவில் அதிக விலை கொண்ட மாடலாக பெனெல்லி இம்பீரியல் 400 பைக் ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

0d750 benelli imperiale 400 bs6

மிக குறைந்த விலையில் துவங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை ரூ.1.59 லட்சம் முதல் ரூ. 2.07 லட்சம் வரை கிடைக்கின்றது.

Honda H’Ness CB 350 Royal Enfield Classic 350 Jawa/Jawa 42 Benelli Imperiale 400
விலை ரூ.1.85 லட்சம் – ரூ.1.90 லட்சம் ரூ.1.59 லட்சம் – ரூ. 2.07 லட்சம் ரூ.1.74- ரூ.1.83 லட்சம் / ரூ.1.65- ரூ.1.74 லட்சம் ரூ.1.99 லட்சம்

 

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 மிகவும் சவாலான விலையில் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் போன்றவை அமைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக வலிமையான நெட்வொர்க் மற்றும் பிராண்ட் மதிப்பினை ஹோண்டா எதிர்கொள்வது மிக கடினமாகவே விளங்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் புதிய கிளாசிக் 350 பைக் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு விற்பனைக்கு வெளியாகும்.

web title : Honda H’ness CB350 vs rivals specs and features – comparison

Tags: Benelli imperiale 400Honda H’Ness CB 350JawaJawa 42Royal Enfield Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

vx2 go and vx2 plus baas

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி

இந்தியாவில் MY2025 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல் வெளியானது

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan