கார் செய்திகள்

ஹோண்டா ஹார்னெட் மற்றும் டியோ 125 ரெப்சால் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2023 ரெப்சால் எடிசனை அடிப்படையாகக் கொண்டு ஹார்னெட் 2.0 மற்றும் டியோ 125 ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு மாடல்களும் ஹோண்டா ரேஸிங் டீம் பாடி கிராபிக்ஸ் டிசைன் கொண்டுள்ளது. மற்றபடி, வேறு ஏவ்விதமான மாற்றங்களையும் பெறவில்லை.

2023 Honda Repsol Edition

புதிய ரெப்சால் கிராபிக்ஸ் ஹோண்டா பிராண்டின் ரேஸிங்  பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என ஹோண்டா கூறுகிறது. இரண்டு மாடல்களும் ராஸ் ஒயிட் மற்றும் வைப்ரண்ட் ஆரஞ்சு ஆகியவற்றின் அடிப்படையில் டூயல் டோன் வண்ண கலவையுடன் ரெப்சோல்-ஸ்டைல் கிராபிக்ஸ் உடன் வருகின்றன. இவை ஹோண்டாவின் மிகவும் பிரபலமான பதிப்புகளில் ஒன்றாகும்.

OBD2 மற்றும் E20 ஆதரவினை பெற்ற ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM-ல் 17.03 hp பவர் மற்றும் 6000 RPM-ல் 16.1 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் தற்பொழுது சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரில் OBD2 மற்றும் இ20 எரிபொருளுக்கு இணக்கமான, 125cc, ஒற்றை சிலிண்டர், eSP (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) கொண்ட ஏர் கூல்டு இன்ஜின் பெற்று ஹோண்டா ஏசிஜி ஸ்டார்டர், 123.92cc இன்ஜின் பவர் 8.16 bhp at 6250 rpm மற்றும் 10.4 Nm டார்க் at 5000 rpm வழங்குகின்றது.

ஹோண்டா  டியோ 125 ரெப்சால் ரூ.92,300

ஹோண்டா ஹார்னெட் 2.0 ரெப்சால் ரூ.1.40 லட்சம்

 

 

Share