Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் முக்கிய சிறப்புகள்

By MR.Durai
Last updated: 1,May 2023
Share
SHARE

honda shine 100 black with red

100cc சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஹோண்டா ஷைன் 100 பைக்கின் என்ஜின், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

விற்பனையில் கிடைத்து வருகின்ற 125cc மாடலின் வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஷைன் 100 மாடல் தோற்ற அமைப்பினை பகிர்ந்து கொண்டு புதிய 100cc என்ஜினை பெற்றுள்ளது.

Honda Shine 100

100cc-110cc சந்தையில் தொடர்ந்து அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா ஷைன் 100 பைக்கின் டிசைன் உள்ளிட்ட அம்சங்கள் 125cc சந்தையில் உள்ள ஷைன் பைக்கினை அடிப்படையாக கொண்டு மிக எளிமையான மற்றும் அதிகப்படியான வசதிகள் இல்லாத அடிப்படையான பைக் மாடலாக வந்துள்ளது.

honda shine 100 bike price

ஷைன் 100 என்ஜின்

புதிதாக வந்துள்ள ஹோண்டா ஷைன் பைக்கில் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் நோக்கில் வெறும் 99 கிலோ எடை கொண்ட மாடலாக அறிமுகம் செய்துள்ளது.  98.98 சிசி PGM-Fi ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500rpm-ல் 7.28 bhp குதிரைத்திறன் மற்றும் 5000rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Honda Shine 100 Engine view

மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இலகுவான கிளட்ச் கொடுத்துள்ளதால் நெரிசல் மிகுந்த சாலைகளில் இலகுவாக கியர் ஷிஃப்ட் செய்யலாம். 70-80 கிமீ வேகத்தை இலகுவாக எட்டுகின்ற மாடலின் மைலேஜ் தொடர்பான விபரங்களை ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்த பொழுதும் சராசரியாக ஹோண்டா ஷைன் 100 பைக் மைலேஜ் 65- 68 kmpl கிடைக்க வாய்ப்புள்ளது.

அகலமான மற்றும் நீளமாக கொடுக்கப்பட்டுள்ள இருக்கை அமைப்பு இருவர் மிக தாராளாமாக அமர்ந்து செல்ல வழிவகுக்கின்றது. சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை, முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் கொடுத்து பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொடுத்துள்ளது.

இந்த மாடலில் ஹாலஜன் ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இரு பிரிவுகளை பெற்ற இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில்  ஓடோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஃப்யூல் லெவல் இண்டிகேட்டர், நியூட்ரல் இண்டிகேட்டர் மற்றும் இன்டிகேட்டர் லைட்டுடன் செக் என்ஜின் லைட் போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளை மட்டுமே பெறுகிறது.

Honda Shine 100 Instrument Cluster e1682929754461

கூடுதல் பாதுகாப்பிற்காக ஹோண்டா ஷைன் 100 பைக்கில் சைட் ஸ்டாண்ட் கட்-ஆஃப் சென்சார் பொருத்தியுள்ளது.

முன்புறத்தில் 130mm மற்றும் பின்புறத்தில் 110mm என இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை கொடுத்துள்ளது. முன்புறத்தில் 2.75-17 மற்றும் 3.00-17 டயர் ஆனது ட்யூப் டயராக கொடுக்கப்பட்டுள்ளது.

Engine

98.98cc, air-cooled, fi

Peak Power

7.38 PS @ 7500rpm

Maximum Torque

8.05 Nm @ 5000rpm

Transmission

4-speed

Honda Shine 100 Seat 1

ஷைன் 100 போட்டியாளர்கள்

கவர்ச்சிகரமான நிறங்கள், கனெக்டேட் வசதிகள் உட்பட நம்பகமான மாடல் என்ற பெயர் மறு விற்பனை மதிப்பு போன்றவற்றை ஹீரோ ஸ்பிளெண்டர்+ தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

குறைவான விலையில் கிடைக்கின்ற HF100, HF டீலக்ஸ் பைக் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 போன்றவற்றுடன் ஹீரோ களமிறக்க உள்ள புதிய பேஷன் பிளஸ் 100 பைக்குகளுக்கு ஹோண்டா ஷைன் 100 எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதுதவிர விலை ஒப்பீடு செய்தால் டிவிஎஸ் ஸ்போர்ட் மாடலும் உள்ளது.

shine 100 bike rear

ஹோண்டா ஷைன் 100 விலை ஒப்பீடு

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 82,564 ஆக உள்ளது.

(shine On-Road Price in Tamil Nadu)

Honda Shine 100 Vs Rivals Price: comparison Table

Shine100 vs rivals on-road Price
Honda Shine 100 ₹ 82,564
Hero HF 100 ₹ 69,985
Hero HF Deluxe ₹ 72,678 – ₹ 82,354
Hero Splendor+ ₹ 89,765 – ₹ 94,890
TVS Sport ₹ 77,936 – ₹ 87,057
Bajaj Platina 100 ₹ 82,954
Hero Passion Plus (new) ₹ 83,450 (expect)

(All 100cc bikes on-Road price TamilNadu)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலையும் டீலர்களுக்கு டீலர் மற்றும் அடிப்படையான கூடுதல் ஆக்சரீஸ் பாகங்கள் சேர்க்கப்படும்பொழுது மாறுபடும்.

honda shine 100 front

ஹீரோ கிளாமர் X 125 Cruise control
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
TAGGED:100cc BikesHonda Shine 100
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
mat orange
Hero Motocorp
ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்
பல்சர் NS125 விலை
Bajaj
பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved