Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மார்ச் 15.., ஷைன் 100 பைக் டீசரை வெளியிட்ட ஹோண்டா

by automobiletamilan
February 27, 2023
in பைக் செய்திகள்

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்க்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா 100சிசி பைக் மாடலை ஷைன் என்ற பெயரில் மார்ச் 15, 2023 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக சிபி ஷைன் 125 சிசி சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக உள்ளது.

இன்றைக்கு ஹோண்டா வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் ‘SHINING FUTURE’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது. 110சிசி சந்தையில் ஹோண்டா லிவோ மற்றும் சிடி 110 பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது.

Honda CB Shine 100

ஷைன் 100 பைக்கின் ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, ஹோண்டா சிபி ஷைன் 125 பைக்கில் இருந்து பெறப்பட்டு சிறிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஹோண்டா இந்த பைக்கில் பயன்படுத்த உள்ள என்ஜின் புதிய 100சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினாக அமைந்திருக்கும். மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையிலான பைக் மாடலாக அமைந்திருக்கலாம்.

புதிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஹீரோ ஸ்ப்ளெண்டர், ஹீரோ HF டீலக்ஸ், பஜாஜ் பிளாட்டினா 100, டிவிஎஸ் ஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு மிக கடுமையான போட்டியாளராக விளங்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஹோண்டா ஷைன் 100 எக்ஸ்-ஷோரூம், ரூ .73,000-76,000 என தொடங்கலாம்.

இதுதவிர ஹோண்டா பிக்விங் டீலர்கள் வழியாக புதிய ஹைனெஸ் சிபி 350 கஃபே ரேசர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Tags: Honda Shine 100
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version