பிரபலமான ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் பைக் E-Pilen மாடலை விற்பனைக்கு வெளியிடுவது தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், 2021-ல் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது.
Pierer Mobility நிறுவனம் (கேடிஎம்,ஹஸ்க்வர்னா, கேஸ் கேஸ், ஆர் ரேமோன் சைக்கிள் தலைமையகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது விற்பனையில் உள்ள ஸ்வார்ட்பிலேன் மற்றும் விட்பிலேன் போன்ற பெயர்களின் அடிப்படையில் எலெக்ட்ரிக் என்பதற்கு முன்புறத்தில் E சேர்க்கப்பட்டு E-Pilen என வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.
ஆரம்ப நிலை தயாரிப்பில் உள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 4kW (5.4hp) மற்றும் 10kW (13.5hp) என இரு விதமான எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றதாக விளங்க உள்ளது. மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் பெர்ஃபாமென்ஸ் மற்றும் பல்வேறு நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கும்.
ஹஸ்க்வர்னா E-01 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் வெளியிட உள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கூட்டணியால் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுதவிர கேடிஎம் மற்றும் பஜாஜ் பிராண்டுகளிலும் பல்வேறு மின் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன.