ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாக வெளியிட உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் ஆட்டோவின் சக்கன் ஆலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
Pierer Mobility நிறுவனம் (கேடிஎம்,ஹஸ்க்வர்னா, கேஸ் கேஸ், ஆர் ரேமோன் சைக்கிள் தலைமையகம்) வெளியிட்டுள்ள அறிக்கையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபாரத்திற்கு உருவாக்கப்பட உள்ள பொதுவான தளத்தில் 4kW-10kW வரையிலான எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக விற்பனைக்கு வரவுள்ள மாடல் 4kW எலக்ட்ரிக் மோட்டார் முன்பாக விற்பனையில் உள்ள பஜாஜ் சேட்டக் மின் ஸ்கூட்டரின் அடிப்படை அம்சங்களை பெற்றுக் கொள்ள வாய்ப்பிருந்தாலும், சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் கூடுதல் ரேஞ்சு வெளிப்படுத்தலாம்.
வரவிருக்கும் ஹஸ்குவர்னா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சக்கனில் அமைந்துள்ள பஜாஜ் ஆலையில் தயாரிக்கப் போவதாக பைரர் மொபிலிட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு தயாராகும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேட்டக் அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதனால், விலை குறைவாக அமைந்திருக்கும். மேலும், கேடிஎம் / ஹஸ்குவர்ணா டீலர் மூலம் விற்பனை செய்யப்படலாம்.
இதுதவிர, ஹஸ்க்வரனா இ-பிலேன் எலக்ட்ரிக் பைக் மாடல் 2022 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.