பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் G 310 சீரிஸ் பைக்குகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு அமெரிக்கா மற்றும் கனடா வரிசை பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜி 310 வரிசையில் உள்ள G 310 R, G 310 GS, மற்றும் G 310 RR ஆகிய மாடல்களும் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாடலாகும்.
பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஜி 310 ஆர் பைக், ஜி 310 ஆர்ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள 312.2 சிசி என்ஜின் 34 hp பவர் 9,700rpm-யிலும் மற்றும் 7,700rpm-ல் 27.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.
தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல், கூடுதலாக புதிய நிறங்களை மட்டும் பெற்றிருக்குகின்றது. ஜி 310 ஆர் பைக்கில் கருப்பு மற்றும் கிரே நிறங்கள், நீல நிறத்தையும் பெற்றுள்ளது.
கூடுதல் வசதிகளாக ரைட் பை வயர் திராட்டிள், கிளட்ச் மற்றும் பிரேக் அட்ஜெஸ்டபிள் வசதி, சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பைக்குகளுக்கு புதிய நுண்ணறிவு அவசர அழைப்பு வசதியை அறிமுகப்படுத்துகிறது.