முந்தைய பிஎஸ்-4 மாடலை விட விலை குறைக்கப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ G 310 R பைக்கின் விலை ரூ.2.45 லட்சம் ஆக அறிவிக்கபட்டுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகளை பெற்று ஸ்டைலிங் அமைப்பில் மாற்றமில்லாமல் வந்துள்ளது.
நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஜி 310 ஆர் பைக்கில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் ஜி 310 ஜிஎஸ் பைக்கில் இடம்பெற்றுள்ள 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.
புதிதாக வந்துள்ள பிஎம்டபிள்யூ G 310 R பைக்கில் கூடுதல் வசதிகளாக ரைட் பை வயர் திராட்டிள், கிளட்ச் மற்றும் பிரேக் அட்ஜெஸ்டபிள் வசதி, சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது.
முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த பிஎஸ்-4 மாடலை விட ரூ.54,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பிஎம்டபிள்யூ மோட்டார்டு ஏற்படுத்தியுள்ளது.
பிஎம்டபிள்யூ G 310 R விலை ரூ.2.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)
web title – 2020 BMW G 310 R launched in India – tamil bike news