டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு கூட்டணி மூலம் பிஎம்டபிள்யூ G 310 R, G 310 GS, G 310 RR, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி அப்பாச்சி RTR 310 பைக் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
10 ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ள 1.40 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா தவிர ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள டிவிஎஸ் மோட்டரின் ஓசூர் ஆலையின் மூலம் பிஎம்டபிள்யூ மோட்டார்டின் உலகளாவிய விற்பனையில் 10 சதவீத பங்களிப்பை உற்பத்தி செய்கின்றது.
TVS-BMW Motorrad
சாதனை குறித்து பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சிஇஓ கே.என் ராதாகிருஷ்ணன், “பிஎம்டபிள்யூ உடனான எங்கள் பயணத்தில் புதிய வரலாற்று மைல்கல்லைக் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து தயாரித்த மாடல்கள் இன்றைக்கு 100க்கு மேற்பட்ட சந்தைகளில் கிடைக்கின்றன. இப்போது, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான இயக்கம் தீர்வுகளை நோக்கி இந்த கூட்டாண்மையின் விரிவாக்கம் மற்றும் விரிவாக்கத்துடன், நாங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட பிஎம்டபிள்யூ CE 02 எலக்ட்ரிக் பைக்கும் உள்ளது. மேலும் இந்தியாவிற்கு வெளியே எங்களது உற்பத்தியை விரிவாக்க கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்டார்.
பிஎம்டபிள்யூ மோட்டார்டு தலைவரான மார்கஸ் கூறுகையில், “இரு நிறுவனத்திற்கு இடையேயான ஒத்துழைப்பின் வெற்றி மற்றும் வலிமை மூலம் 10வது ஆண்டு நிறைவு சான்றாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய ஒரு அசாதாரண வெற்றிக் கதையாக வளர்ந்துள்ளது. எங்களின் வலுவான 500cc பிரிவில் ஈர்க்கக்கூடிய மாடல்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என குறிப்பிட்டுள்ளார்.