சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ CE 02 எலக்ட்ரிக் பைக் மாடல் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டு 15 hp பவர் வழங்கும் டாப் வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 90 Km ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 45 கிமீ வேகம் பெற்ற குறைந்த வேகம் சிஇ 02 மாடல் ஆனது 45 கிமீ ரேன்ஜ் கொண்டதாக விளங்கும்.
BMW CE 02
பேட்டரி நீக்கும் வகையிலான அம்சத்தை பெற்ற பிஎம்டபிள்யூ CE 02 மாடலில் 2 Kwh பேட்டரி பேக் பெற்ற வேரியண்ட் 119kg கிலோ எடை கொண்டு 45km ரேன்ஜ் மற்றும் 45kph அதிகபட்ச வேகத்தை பெற்றதாக உள்ளது.
CE 02 15hp பவரை வழங்குகின்ற வேரியண்ட 90km ரேன்ஜ் கொண்டுள்ளது. இதன் எடை 132 கிலோ (ஒற்றை-பேட்டரி பதிப்பை விட 13 கிலோ அதிகம்) மற்றும் 95 கிமீ வேகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வேரியண்டும் 0.9kW நிலையான சார்ஜர் அல்லது விருப்பமான 1.5kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம்.
15hp வேரியண்ட் ஆனது சாதாரன சார்ஜரைப் பயன்படுத்தினால் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 5 மணிநேரம் 12 நிமிடம் எடுக்கும், இது வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி 3 மணிநேரம் 30 நிமிடம் தேவைப்படும். குறைந்த வேகப் பதிப்பு, 0.9 kw பயன்படுத்தி, முழு சார்ஜ் செய்ய 3 மணிநேரம் 2 நிமிடம் ஆகும்.
கீலெஸ் கோ, எல்இடி ஹெட்லைட், ரிவர்ஸ் கியர் மற்றும் புளூடூத் இணைப்புடன் கூடிய 3.5-இன்ச் டிஎஃப்டி டேஷ். சர்ஃப் மற்றும் ஃப்ளோ ஆகிய இரண்டு ரைடிங் முறைகள் உள்ளது.
பிஎம்டபிள்யூ CE 02 விலை USD 7,599 (தோராயமாக ரூ. 6.2 லட்சம்), மற்றும் டாப் வேரியண்ட் USD 8,474 (தோராயமாக ரூ. 7 லட்சம்) ஆகும்.