பிஎஸ்-6 பிஎம்டபிள்யூ G 310 GS பைக் விற்பனைக்கு வெளியானது

0

bmw g 310 gs

மேம்பட்ட வசதிகள் உட்பட புதிய நிறங்களை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ G 310 GS அட்வென்ச்சர் ரக பைக்கின் விலை ரூ.2.85 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. எனவே முந்தைய பிஎஸ்-4 மாடலை விட ரூ.64,000 வரை விலை குறைந்துள்ளது.

Google News

அட்வென்ச்சர் ஜி 310 ஜிஎஸ் பைக்கில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் ஜி 310 ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.

புதிதாக வந்துள்ள பிஎம்டபிள்யூ G 310 ஜிஎஸ் பைக்கில் கூடுதல் வசதிகளாக ரைட் பை வயர் திராட்டிள், கிளட்ச் மற்றும் பிரேக் அட்ஜெஸ்டபிள் வசதி, சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. மாற்றங்கள் கொடுக்கப்பட்டு புதிய நிறங்கள் மற்றும் சிறப்பு 40 இயர்ஸ் எடிசன் ஆகியவை இடம்பெற உள்ளது.

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த பிஎஸ்-4 மாடலை விட ரூ.64,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை பிஎம்டபிள்யூ மோட்டார்டு ஏற்படுத்தியுள்ளது.

பிஎம்டபிள்யூ G 310 GS விலை ரூ.2.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

2021 BMW G 310 GS bike bs6 BMW G 310 GS Instrument Cluster 2021 BMW G 310 GS

web title – 2020 BMW G 310 GS adventure launched in India – tamil bike news