Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏதெர், ஓலா, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடி திரும்ப தருகின்றது

by MR.Durai
4 May 2023, 3:22 am
in Bike News
0
ShareTweetSend

 

indian e scooter makers to refund customers இந்திய அரசின் FAME-II மானியம் தொடர்பான எலக்ட்ரிக் சார்ஜருக்கான ₹ 288 கோடி பணத்தை திரும்ப வழங்க ஏதெர், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ வீடா நிறுவனங்கள் முன்வந்துள்ளது.

முன்பே இது தொடர்பாக ஓலா திரும்ப தர உள்ள 130 கோடி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா ஆட்டோடெக் என இரு நிறுவனத்துக்கு  249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ.116 கோடி அபராதமும் மற்றும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

EV Charger Refund

நான்கு நிறுவனங்களும் மானியங்களைப் பெறுவதற்காக அரசின் FAME திட்டத்தின் கீழ் 1.5 லட்ச ரூபாய்க்கு மேல் விலையை நிர்ணையம் செய்துள்ளன. தற்பொழுது ஒலா, ஏதெர், விடா போன்ற நிறுவனங்களை விலையை குறைத்துள்ளன. குறிப்பாக, மென்பொருள் அம்சங்கள் மற்றும் ஆஃப் போர்டு சார்ஜருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கியுள்ளன.

இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) மேற்கொண்டு வரும் ஒழுங்குமுறை நடவடிக்கையை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், ஓலா S1Pro மாடல் ஸ்கூட்டரை FY 2019-20 முதல் மார்ச் 30, 2023 வரை வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆஃப்-போர்டு சார்ஜருக்கான கட்டணத்திற்கான பணத்தை திரும்ப தர உள்ளது.

ஒரு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 9000 கட்டணத்தை சுமார் 1,00,000 ஸ்கூட்டர்களுக்கு ரூபாய் 130 கோடி திரும்ப வழங்குகின்றது.

ஏதெர் எனெர்ஜி

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சார்ஜருக்கான தொகையை அதிகபட்சமாக ₹ 140 கோடியை  பணத்தை திரும்ப 95,000 வாடிக்கையாளர்களுக்கு ஏதெர் எனெர்ஜி வழங்குகின்றது. குறிப்பாக ஏப்ரல் 12, 2023 வரை எலக்ட்ரிக் டூ வீலரை வாங்கியவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கூடுதலாக மென்பொருள் மேம்பாடு பெற கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் பேட்டரி திறனை குறைத்த காரணத்துக்கு ₹25 கோடியை கனரகத் தொழில் துறை அமைச்சகம் அபராதமாக வசூலிக்க உள்ளது.

டிவிஎஸ் மோட்டார்

டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஐக்யூப் S மே 2022 முதல் மார்ச் 2023 வரை வாங்கிய 87,000 வாடிக்கையாளர்களுக்கு ₹15.61 கோடியை திருப்பிச் செலுத்தும்.

ஹீரோ விடா 

அடுத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ‘VIDA V1 Plus’ மற்றும் ‘vida V1 Pro’ மாடல்களை வாங்கிய 1,100 வாடிக்கையாளர்களுக்கு ₹2.23 கோடியை திருப்பித் தரவுள்ளது. மார்ச் மாதம் வரை ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு பொருந்தும்.

Related Motor News

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது

Tags: Ather 450XOla S1 ProTVS iQube
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new yamaha xsr155

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan