Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜாவா பைக் காத்திருப்பு காலம் 6 மாதமாக அதிகரிப்பு

by MR.Durai
22 December 2018, 7:45 am
in Bike News
0
ShareTweetSend

மிக நீண்ட பாரம்பரியத்தை பெற்ற ஜாவா பைக் , இந்திய சந்தையில் மீண்டும் ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ என இரு மோட்டார்சைக்கிள் வாயிலாக வெளிவந்த நிலையில் இரு பைக்கின் காத்திருப்பு காலம் 6 மாதமாக அதிகரித்துள்ளது.

60, 70 களின் பிரபலமான ஜாவா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜாவா , ஜாவா 42 பைக்குகள் மாடல் மற்றும் நிறம் அடிப்படையில் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஜூன் 2019க்கு பிறகு டெலிவரி தொடங்கப்படும்.

மஹிந்திரா நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் பற்றி கிளாசிக் லெஜென்ட்ஸ் குறிப்பிடுகையில், விற்பனை எண்ணிக்கை காட்டிலும், தரத்திற்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி இறுதி வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக டெலிவரி தொடங்கப்பட உள்ள ஜாவா பைக்குகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் புனே, பெங்களூரு நகரங்களில் திறக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது புனே, பெங்களூரு நகரங்களில் டெஸ்ட் டிரைவ் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களில் பல்வேறு நகரங்களில் டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஜாவா பைக் டீலர்கள் சென்னை (3 டீலர்கள்), கோவை , மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் (மார்ச் 2019) ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.

ஜாவா பைக் என்ஜின்

இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Jawa and Jawa Forty Two Image Gallery

Related Motor News

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

குறைந்த விலை 2024 ஜாவா 350 விற்பனைக்கு வெளியானது

புதிய நிறத்தில் ஜாவா 350 பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஸ்கிராம்பளர் பைக்கை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் ஜாவா

Tags: JawaJawa Forty two
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan