சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஜாவா அல்லது யெஸ்டி ஸ்கிராம்பளர் ஸ்டைல் பைக்கின் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜாவா பிராண்டில் ஜாவா 300, பெராக் மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில், ஃபார்ட்டி டூ அடிப்படையிலான பாகங்களை கொண்டு ஸ்கிராம்பளர் பைக்கின் தோற்றத்தை பெற்றுள்ள மாடல் புனே அருகில் சோதனை செய்யப்பட்டு வரும் படங்கள் முதன்முறையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

பொதுவாக ஜாவா பயன்படுத்தி வருகின்ற  293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27.3 bhp பவரையும், 27 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

சோதனை செய்யப்படுகின்ற மாடலின் டேங்க் அமைப்பு 42 மாடலின் அடிப்படையில் சிறிய மாற்றங்களை மட்டும் பெற்றிருக்கலாம். மற்றபடி இரட்டை பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர், ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற இருக்கை அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், பின்புறத்தில் இரட்டை ஸ்பீரிங் பெற்ற ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கின்றது.

சோதனை ஓட்டத்தில் உள்ள யெஸ்டி ஸ்கிராம்பளர் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

image source – motorbeam