மிக நீண்ட பாரம்பரியத்தை பெற்ற ஜாவா பைக் , இந்திய சந்தையில் மீண்டும் ஜாவா , ஜாவா ஃபார்ட்டி டூ என இரு மோட்டார்சைக்கிள் வாயிலாக வெளிவந்த நிலையில் இரு பைக்கின் காத்திருப்பு காலம் 6 மாதமாக அதிகரித்துள்ளது.
60, 70 களின் பிரபலமான ஜாவா மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜாவா , ஜாவா 42 பைக்குகள் மாடல் மற்றும் நிறம் அடிப்படையில் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஜூன் 2019க்கு பிறகு டெலிவரி தொடங்கப்படும்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஜாவா மோட்டார்சைக்கிள் பற்றி கிளாசிக் லெஜென்ட்ஸ் குறிப்பிடுகையில், விற்பனை எண்ணிக்கை காட்டிலும், தரத்திற்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி இறுதி வாரங்களில் அதிகார்வப்பூர்வமாக டெலிவரி தொடங்கப்பட உள்ள ஜாவா பைக்குகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் புனே, பெங்களூரு நகரங்களில் திறக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது புனே, பெங்களூரு நகரங்களில் டெஸ்ட் டிரைவ் வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில வாரங்களில் பல்வேறு நகரங்களில் டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஜாவா பைக் டீலர்கள் சென்னை (3 டீலர்கள்), கோவை , மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் (மார்ச் 2019) ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது.
ஜாவா பைக் என்ஜின்
இரட்டை புகைப்போக்கி குழல் பெற்ற 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.
கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஜாவா – ரூ. 1.64 லட்சம்
ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்
ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)
(டெல்லி விற்பனையக விலை)
Jawa and Jawa Forty Two Image Gallery
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…