Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்., ஜாவா பைக்குகளை முன்பதிவு செய்ய முடியுமா ?

By MR.Durai
Last updated: 26,December 2018
Share
SHARE

மஹிந்திரா நிறுவனத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் வாயிலாக வெளியான ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 பைக்குகளுக்கு கிடைத்துள்ள அபரிதமான வரவேற்பினால் தற்காலிகமாக ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

60, 70 களில் இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கிய ஜாவா மீண்டும் 22 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்துள்ளதால், ஜாவா பிரியர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் இந்த பைக் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். சில வாரங்களாக  ரூ. 5000 செலுத்தி ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் முன்னணி நகரங்களில் தொடங்கப்பட்ட 10 டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

வருகின்ற 2019 மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 100 க்கு மேற்பட்ட டீலர்களை ஜாவா தொடங்க உள்ள நிலையில் , டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என இரண்டிலும் வெளியிடப்படுள்ள இந்த மாடல்களின் உற்பத்தி பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக ஜாவா டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் ஜூன் 2019 க்கு பிறகு டெலிவரி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கிளாசிக் லெஜென்ட்ஸ் இணை நிறுவனர், அனுபம் தரேஜா செய்தியாளர்களிடம் கூறுகையில் மிக அதிப்படியான முன்பதிவை பெற்று, செப்டம்பர் 2019 வரையிலான காலகட்டத்திற்குள் உற்பத்தி செய்யப்பட உள்ள பைக்குகளுக்கு முன்பதிவு நிறைவுற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, ஆன்லைன் முன்பதிவு மட்டும் டிசம்பர் 25, 2018 நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஜாவா பைக் என்ஜின்

இரண்டு குழல் பெற்ற புகைப்போக்கி கொண்ட 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

கிளாசிக் ரகத்திலான ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் , புதுச்சேரி ஜாவா பைக் டீலர்கள்

தமிழகத்தில் மிக விரைவாக ஜாவா பைக் டீலர்கள் சென்னை (3 டீலர்கள்), புதுச்சேரி, கோவை , மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர் மற்றும் வேலூர் (மார்ச் 2019) ஆகிய நகரங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த டீலர்கள் திறக்கப்பட்ட பின்னரே இனி முன்பதிவு செய்ய இயலும். அடுத்த சில நாட்களுக்குள் சென்னையில் ஜாவா திறக்கப்பட உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Jawa and Jawa Forty Two Image Gallery

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:JawaJawa BikeJawa Forty two
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms