Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஜாவா பைக் உற்பத்தி நிறுத்தம்.., பெராக் பைக் டெலிவரி எப்போது ? | Automobile Tamilan

ஜாவா பைக் உற்பத்தி நிறுத்தம்.., பெராக் பைக் டெலிவரி எப்போது ?

deace jawa perak

சர்வதேச அளவில் பல்வேறு மோட்டார் நிறுவனங்கள் மூட்டப்படுள்ள நிலையில் ஜாவா பைக் நிறுவனத்தின் பாபர் ரக ஸ்டைல் பெராக் பைக்கிற்கு முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் விநியோகம் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் துவங்கும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவிட்-19 வைரஸ் பரவலாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தீவரமாக பரவ துவங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் தங்கள் நிறுவனத்தை மூடியுள்ளனர்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்பதிவு நடைபெற்று வரும் ஜாவா பெராக் பைக் மாடலுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் டெலிவரி வழங்கப்பட திட்டமிட்டிருந்த நிலையில், இந்நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளாதால் டெலிவரி தேதி மீண்டும் உற்பத்தி துவங்கிய பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் மாதந்தோறும் உற்பத்தி எண்ணிக்கை 10,000 உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜாவா தெரிவித்துள்ளது. எனவே, ஜாவா பைக்குகளின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என தெரிகின்றது.

334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீலை கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பெராக் பைக் ரூ .1.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயித்துள்ளது.

Exit mobile version