பாபர் ஸ்டைல் மாடலாக வந்துள்ள புதிய ஜாவா பெராக் பைக்கிற்கான முன்பதிவை மாலை 6 மணி முதல் ஜாவா தனது இணையதளம் மற்றும் டீலர்கள் மூலம் துவங்க உள்ளது. ரூ.10,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுவதுடன் விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
முன்பாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜாவா , ஜாவா 42 என்ற இரு மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில் மூன்றாவதாக வெளியிட்டுள்ள பாபர் ஸ்டைல் மாடலில் ஒற்றை இருக்கை ஆப்ஷன் வழங்கப்பட்டு மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இருக்கையின் பின்பகுதியில் டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீல் கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக அமைந்துள்ளது.
ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பெராக் பைக்கின் விலையை ரூ .1,94,500 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 முன்பதிவு தொகை செலுத்தப்பட வேண்டும். ஏப்ரல் 2 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=ZUiiFHsvNEw]