இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கவாஸாகி நின்ஜா 650 பைக் அடிப்படையிலான கவாஸாகி நின்ஜா 650 KRT பைக் ரூ.5.49 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
கவாஸாகி நின்ஜா 650 KRT
ஸ்டான்டர்டு மாடலை விட கூடுதலான தோற்ற மாற்றங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.
KRT என்றால் கவாஸாகி ரேசிங் டீம் என்பது விளக்கமாகும் (KRT stands for Kawasaki Racing Team). மஞ்சள் நிற பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ள 650 கேஆர்டி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சாதாரண மாடல் வகையுடன் இணையாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
ஃப்யூவல் இன்ஜெக்ஷன் நுட்பத்தை பெற்ற 649 சிசி எஞ்சின் அதிகபட்சமாக 67.3hp ஆற்றல் மற்றும் 65.7Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்புற சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்று ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
சாதாரண மாடலை விரூ.16,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு, கவாஸாகி நின்ஜா 650 KRT பைக் ரூ.5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.