ஜப்பானிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான கவாசாகி நிறுவனம், தனது புதிய கவாசாகி நிஞ்ஜா ZX-6R மோட்டார் சைக்கிள்களுக்கான முன்பதிவை தொடங்கியது. இந்த கவாசாகி நிஞ்ஜா ZX-6R மோட்டார் சைக்கிள்கள் CKD ரூட் வழியாக, புனேவில் உள்ள சாகன் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்கள் KRT எடிசன் போன்று சிங்கிள் சீட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மோட்டார் சைக்கிள்களில் ABS, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் குயிக் ஷிப்டர் போன்ற தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும் இதில் அன்லாக் டெக்கோ மீட்டர், பெட்ரோல் அளவு காட்டும் வசதி, கியர் எந்த இடத்தில் உள்ளது என்பதை காட்டும் வசதி மற்றும் பல்வேறு வகையில் செயல்படும் LCD ஸ்கிரீன் ஒன்றையும் கொண்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களில் பிரிட்ஜ்ஸ்டோன் பேட்டல்எஸ் ஹைபர்ஸ்போட் S22 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள்கள், 636cc இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் கொண்டிருக்கும்.. இந்த மோட்டார் சைக்கிளின் விலை குறித்த விபரம் இன்னும் தெரிவிக்கப்படாமலேயே உள்ளது. விரைவில் இதை கவாசாகி நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்த மோட்டார் சைக்கிளை வாங்க 1.5 லட்ச ரூபாயை நிறுவன டீலர்ஷிப்களிடம் செலுத்த வேண்டும் என்றும் இந்த புக்கிங் இந்த மாத இறுதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான டெலிவரி வரும் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.