Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

இந்தியா வரவிருக்கும் கவாஸாகி நின்ஜா ZX-4R அல்லது ZX-6R பைக்கின் டீசர் வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 6,September 2023
Share
1 Min Read
SHARE

2024 Kawasaki Ninja ZX-6R price

கவாஸாகி இந்தியா நிறுவனம், தனது சமூக ஊடக பக்கங்களில் முதல்முறையாக இன்லைன் 4 சிலிண்டர் என்ஜின் கொண்ட மாடல் குறித்தான டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் நின்ஜா ZX-4R அல்லது ZX-6R பைக்குகளில் இன்லைன் 4 சிலிண்டர் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ZX-4R மற்றும் ZX-6R பைக்குகள் மிக ஸ்டைலிஷான ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்று அதிநவீன வசதிகளை கொண்டதாகும்.

Kawasaki Ninja ZX-4R

நின்ஜா ZX-4R ஆனது 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டு 14,500rpm-ல் 80bhp மற்றும் 13,000rpm-ல் 39Nm வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு-வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் க்விக் ஷிஃப்டரும் உள்ளது.

இசட்எக்ஸ்-4ஆர் மாடலில் நிசின் நிறுவன நான்கு-பிஸ்டன் ரேடியல் காலிப்பர்களுடன் முன்பக்கத்தில் இரட்டை 290mm டிஸ்க் பிரேக்கிங் கையாளப்படுகிறது, இருப்பினும் பின்புறம் ஆக்சிஸ் மாஸ்டர் சிலிண்டரைப் பெற்று 220 mm டிஸ்க் உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. டயர் அளவுகள் 120/70-ZR17 முன் மற்றும் 160/60-ZR17 பின்புறம் பெற்றுள்ளது.

அடுத்தப்படியாக, ஒருவேளை நின்ஜா ZX-6R இந்தியா வந்தால் 636cc, இன்-லைன், நான்கு சிலிண்டர் என்ஜின் 13,000rpm-ல் 129bhp மற்றும் 10,800rpm-ல் 69Nm வெளிப்படுத்தும். இதில் ஆறு-வேக கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச்லெஸ் அப் ஷிஃப்ட் மற்றும் டவுன் ஷிஃப்ட்களுக்கான க்விக் ஷிஃப்டரைப் பெறுகிறது.

முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வரவிருக்கும் கவாஸாகி நின்ஜா ZX-4R விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

More Auto News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + சிறப்பு பதிப்பு அறிமுகம்
ஏப்ரிலியா SXR 160 ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது
இந்தியாவில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் காட்சிக்கு வந்தது – India Bike Week 2019
1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
டிரையம்ப் டேடோனா 660 அறிமுகம்., இந்தியா வருமா ?
2020 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் டீசர் வெளியீடு
இந்திய சந்தையில் விடைபெறும் ஹார்லி-டேவிட்சன்
181 கிமீ ரேஞ்சு., சிம்பிள் OneS எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!
இரண்டு 125cc ஸ்கூட்டர்களை வெளியிட உள்ள ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுக தேதி வெளியானது
TAGGED:Kawasaki Ninja ZX-4RKawasaki Ninja ZX-6R
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2024 Pulsar N150
Bajaj
2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
சூப்பர் மீட்டியோர் 650
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved