கைனடிக் E-லூனா எலக்ட்ரிக் மொபெட் அறிமுகம் எப்பொழுது ?

பிரபலமான லூனா மொபெட்டின் அடிப்படையில் கைனடிக் க்ரீன் எனர்ஜி நிறுவனம், E-லூனா மாடலை 100 கிமீ ரேஞ்சு கொண்டதாக விற்பனைக்கு வெளியிட உள்ளதை இந்நிறுவனத்தின் தலைமை செய்ல் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

கைனெடிக் கிரீன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலஜா ஃபிரோடியா மோட்வானி இ-லூனா என்ற பெயரையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Kinetic E-Luna

இந்தியாவின் ஐகானிக் மாடல்களில் ஒன்றான லூனா மொபெட் பிரபலமாக விற்பனையில் இருந்த நிலையில் காலப்போக்கில் மறைந்த போனது. மீண்டும் எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளதை தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் மொபெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இ-லூனா மின்சார மொபட்டின் வேகம் அதிகபட்சமாக 40-50kmph வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 100 கிமீ வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம். பேட்டரி ஸ்வாப் ஆப்ஷனுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக தனிநபர் மற்றும் வணிகரீதியான B2B வாடிக்கையாளர்கள் என இருபிரிவிலும் வெளியாகலாம்.

புதிய கைனடிக் இ-லூனா மொபெட்டின் விலை ரூ.80,000 முதல் ரூ.90,000 விலைக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் கிடைக்கலாம்.

Share