கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

kinetic zulu electric scooter

கைனெடிக் கீரின் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.94,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 104 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

அதிகபட்சமாக 2.1 kW பவரை வழங்கும் BLDC ஹப் மோட்டர் ஆனது பெற்று அதிகபட்ச வேகம் மணிக்கு 60 கிமீ வெளிப்படுத்துகின்றது.

Kinetic Zulu Escooter

ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் IP67 சான்றிதழ் பெறப்பட்ட 2.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 2.1 kw பவரை வெளிப்படுத்துகின்ற பிஎல்டிசி ஹப் மோட்டார் ஆனது பெற்று டாப் ஸ்பீடு 60 கிமீ வேகத்தை கொண்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜ் அதிகபட்சமாக 104 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது.

1360 மிமீ வீல்பேஸ் கொண்ட ஜூலு ஸ்கூட்டரின் நீளம் 1830 mm , அகலம் 715 mm, மற்றும் உயரம் 1135 mm பரிமாணங்களை பெற்றுள்ளது. 160 mm கிரவுண்ட் கிளியரண்ஸ் உடன் 3.00-10 அங்குல டயர் கொண்டுள்ளது. பேலோடு அதிகபட்சமாக 150 கிலோ கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொண்டதாக வந்துள்ளது.

கைனெடிக் ஜூலு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ₹ 94,900 ஆக உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

கைனெடிக் நிறுவனம் இ-லூனா மொபெட் மாடல் 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

kinetic zulu electric scooter price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *