கேடிஎம் டியூக் வரிசையில் புதிதாக இணைந்துள்ள 990 டியூக் பைக் மாடல் பல்வேறு புதிய ஸ்டைல் மாற்றங்களை கொண்டு நேக்டூ ஸ்டீரிட் ஃபைட்டரில் அதிகபட்சமாக 123 hp பவரை வழங்குகின்ற புதிய LC8c, 947cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் 990 டியூக் மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகும்.
KTM 990 Duke
மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற 990 டியூக் பைக்கில் நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் செங்குத்தான எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
LC8c 947cc, லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் இன்ஜின் அதிகபட்சமாக 123bhp பவர் மற்றும் 103Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
இந்த பைக் மாடலில் ரைடருக்கு ஏற்ற வகையில் உதவும் பல்வேறு மின்னணு ரைடர் எய்ட்களின் தொகுப்பு உள்ளது.டிராக்ஷன் கட்டுப்பாடு, ரைடிங் முறைகள், ஏபிஎஸ் மோட், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப்மீட்டர் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்ற TFT டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 990 டியூக் பைக்கில் இரண்டும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான WP Apex யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவற்றை பெறுகின்றது. முன்புறத்தில் 120/70-ZR17 டயருடன் இரண்டு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்குடன் 180/55-ZR17 அலாய் வீல் உடன் பிரிட்ஜ்ஸ்டோன் S22 டயர்களை பெற்றுள்ளது.