ஹார்லி-டேவிட்சன் எலக்ட்ரிக் பிரிவான லைவ்வயர் வெளியிட்டுள்ள 125cc பைக்குகளுக்கு இணையான இரண்டு எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் நகர்ப்புற பயன்பாடிற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பினை கொண்ட ஸ்டீரிட் மற்றும் ட்ரையில் தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது.
ஆரம்ப நிலை தயாரிப்பில் உள்ள இந்த மாடல்கள் மில்வாக்கியில் HDHomecoming என்ற நிகழ்ச்சியில் காட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
LiveWire Street and Trail Concepts
இரு மாடல்களிலும் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டு நீக்கி மாற்றிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. முழுமையான நுட்பங்களை வெளியிடவில்லை என்றாலும், சுமார் 3 வினாடிகளில் 0–50 கிமீ வேகத்தையும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ எட்டுவதுடன் , முழுமையான சார்ஜில் 160 கிமீ பயணத்தை மேற்க்கொள்ளலாம்.
எலக்ட்ரிக் மோட்டோ அனுபவத்தை வழங்கும் ஸ்டீரிட் மாடல் அனைத்து விதமான நகர்ப்புற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் ட்ரெயில் கான்செப்ட் ஆனது அனைத்து ஆஃப் ரோடு சார்ந்த சாலைகளுக்கு ஏற்றதாக விளங்கும்.
இந்த இரண்டு கான்செப்ட் மாடல்களும் ஆரம்ப நிலை தயாரிப்பு கட்டத்தில் உள்ளதால் இன்னும் சில மாதங்கள் எடுத்துக் கொண்டு உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து சந்தைக்கு வரக்கூடும்.