Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திரா மோஜோ UT300 பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
5 March 2018, 10:27 pm
in Bike News
0
ShareTweetSend

குறைந்த விலையில் கார்புரேட்டர் பெற்ற மஹிந்திரா மோஜோ UT300 பைக் ரூ.149 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது.  விற்பனையில் உள்ள XT300 பைக் மாடலை விட ரூ.21,000 விலை குறைக்கப்பட்ட மாடலாக மோஜோ வெளியாகியுள்ளது.

மஹிந்திரா மோஜோ UT300

அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக பைக்காக மிரட்டலான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் இரட்டை பிரிவு வட்ட வடிவ முகப்பு விளக்குடன் நேர்த்தியாக உள்ளது. இரட்டை புகைப்போக்கிகளை கொண்டுள்ள சிறப்பான இருக்கை அமைப்பினை பெற்றுள்ள யூஎஸ்டி ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது, ஆனால் XT300 யூஎஸ்டி ஃபோர்க்கினை தொடர்ந்து பெற்றுள்ளது . வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களில் வந்தது.

27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க்  29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.

மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். தற்பொழுதும் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை. சக்கரங்களில் எம்ஆர்எஃப் டயர் வழங்கப்பட்டுள்ளது.

UT300 பைக்கிற்கு XT300 பைக் மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களில் மிக முக்கியமாக ஃப்யூவல் இன்ஜெக்டர், பைரேலி டயர், யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுக்கு மாற்றாக கார்புரேட்டர் , எம்ஆர்எஃப் டயர்,  டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ UT300 பைக் விலை ரூ. 1.49 லட்சம் ஆகும். அறிமுக விலையாக ரூ.10,000 குறைக்கப்பட்டு ரூ.1.39 லட்சத்திற்கு சில வாரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

Related Motor News

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்

மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது

மஹிந்திரா Vision SXT பிக்கப் கான்செப்ட் அறிமுகம்

Tags: MahindraMahindra Mojo
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new tvs apache rtx adventure bike

புதிய அட்வென்ச்சர் சாகாப்தத்தை உருவாக்குமா.! அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300

new tvs apache rtx

₹ 1.99 லட்சத்தில் டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி RTX அட்வென்ச்சர் வெளியானது

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan