குறைந்த விலையில் கார்புரேட்டர் பெற்ற மஹிந்திரா மோஜோ UT300 பைக் ரூ.149 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. விற்பனையில் உள்ள XT300 பைக் மாடலை விட ரூ.21,000 விலை குறைக்கப்பட்ட மாடலாக மோஜோ வெளியாகியுள்ளது.
மஹிந்திரா மோஜோ UT300
அட்வென்ச்சர் ஸ்போர்ட்டிவ் ரக பைக்காக மிரட்டலான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் இரட்டை பிரிவு வட்ட வடிவ முகப்பு விளக்குடன் நேர்த்தியாக உள்ளது. இரட்டை புகைப்போக்கிகளை கொண்டுள்ள சிறப்பான இருக்கை அமைப்பினை பெற்றுள்ள யூஎஸ்டி ஃபோர்க்குகளுக்கு மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது, ஆனால் XT300 யூஎஸ்டி ஃபோர்க்கினை தொடர்ந்து பெற்றுள்ளது . வெள்ளை , கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று விதமான வண்ணங்களில் வந்தது.
27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் கார்புரேட்டர் பொருத்தப்பட்ட ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.
மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். தற்பொழுதும் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை. சக்கரங்களில் எம்ஆர்எஃப் டயர் வழங்கப்பட்டுள்ளது.
UT300 பைக்கிற்கு XT300 பைக் மாடலுக்கும் உள்ள வித்தியாசங்களில் மிக முக்கியமாக ஃப்யூவல் இன்ஜெக்டர், பைரேலி டயர், யூஎஸ்டி ஃபோர்க் ஆகியவற்றுக்கு மாற்றாக கார்புரேட்டர் , எம்ஆர்எஃப் டயர், டெலிஸ்கோபிக் ஃபோர்கினை கொண்டுள்ளது.
மஹிந்திரா மோஜோ UT300 பைக் விலை ரூ. 1.49 லட்சம் ஆகும். அறிமுக விலையாக ரூ.10,000 குறைக்கப்பட்டு ரூ.1.39 லட்சத்திற்கு சில வாரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.