Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலை ஹார்லி-டேவிட்சன் X 350 பைக் அறிமுகம்

by MR.Durai
10 March 2023, 12:16 pm
in Bike News
0
ShareTweetSend

Harley Davidson X 350

சீனாவின் QJ மோட்டார்ஸ் உடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள X 350 மற்றும் X 500 என இரு பைக்குகளில் முதல்முறையாக ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 350 பைக்கின் முழு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே ஹார்லியின் குறைந்த விலை X பைக் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக சீன சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹார்லி X 350 பைக் அறிமுகம் செய்யப்படுமா ? என்ற கேள்விக்கு எந்த உறுதியான பதிலும் இல்லை. ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தயாரித்து வரும் 421cc என்ஜின் அடிப்படையில் அனேகமாக புதிய பைக்கை இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

Harley-Davidson X 350

நவீனத்துவமான டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள ரோட்ஸ்டெர் ஹார்லி டேவிட்சன் X 350 பைக்கில் மிக நேர்த்தியான டிசைன் வடிவத்தை ஸ்போர்ட்ஸ்டெர் XR1200X பைக்கிலிருந்து பெற்று பயன்படுத்தி இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான தோற்றத்தை கொண்டுள்ளதால் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது.

Harley Davidson X 350 bike Features

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறக்கூடிய இந்த பைக்கில் அனைத்தும் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. X 350 பைக்கில் ஆரஞ்சு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் X 350 பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 353சிசி, இன்லைன் ட்வின்-சிலிண்டர் இன்ஜினுடன் லிக்விட் கூலிங் வசதியுடன் 70.5mm X 45.2mm போர் மற்றும் ஸ்ட்ரோக் அளவினை கொண்டு 36.2bhp பவர் மற்றும் 31 Nm டார்க் வெளிப்படுத்துகிறது.  டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை, ஆறு வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஹார்லி பைக்குகள் சிறப்பான மற்றும் உயர் ரகமான வசதிகளை பெற்றிருக்கும். அதனை போலவே இந்த மாடலும் முன்புறத்தில் ரீபௌண்ட் அட்ஜஸ்ட் வகையில் 41mm அப் சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆனது ஸ்பிரிங் ப்ரீலோட் மற்றும் ரீபவுண்டுக்கு ஏற்ற வகையில் கொடுக்கப்பட்டு 17-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ளது.

hd x350 bike

முன்புறத்தில் இரட்டை டிஸ்க்குகள் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்ட ஹார்லி-டேவிட்சன் X 350 பைக் எடை 180 கிலோ ஆகும்.

இந்த மாடலின் இருக்கை உயரம் 817மிமீ மற்றும்185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 120/70/17  முன்புற டயர் மற்றும் 160/60/17 பின்புற டயர் பயன்படுத்தப்பட்டுள்ள நிறுவனம் Pirelli Angel ST ஆகும்.

Harley-Davidson X 350 விலை

சீன சந்தையில விலை அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆன்லைன் வழியாக கசிந்த விபரத்தின் படி ஹார்லி-டேவிட்சன் X 350 விலை 33,388 யுவான் (ரூ. 3.93 லட்சம்) என தெரியவந்துள்ளது.

Harley Davidson X 500 மாடல் விபரம் தற்பொழுது அறிவிக்கப்படவிலை. ஆனால் இந்த பைக் பெனெல்லி Leoncino 500 என்ஜினை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 500சிசி லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் 47பிஎச்பி பவரையும், 46என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் குறைந்த விலை பைக் குறித்தான அறிமுகம் பற்றி எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் புதிய பைக்கை வெளியிடலாம்.

ஹார்லி-டேவிட்சன் X 350 படங்கள்

Harley Davidson X 350
hd x350
hd x350 bike
Harley Davidson X 350 bike Features
Harley Davidson X 350 black Colours
Harley Davidson X 350 Rear view
Harley Davidson X 350 bike
Harley Davidson X 350 headlight

Related Motor News

புதிய ஹார்லி-டேவிட்சன் X 500 பைக் அறிமுகம்

ஹார்லி-டேவிட்சன் X350, X500 பைக்கின் படங்கள் கசிந்தது

Tags: Harley-Davidson X350Harley-Davidson X500
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

கேடிஎம் 160 டியூக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan