
ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியின் இரண்டாவது மாடலாக XR750 மற்றும் XR1200 ஸ்போர்ட்டிவ் டிராக்கர் அடிப்படையில் X440 T மோட்டார்சைக்கிள் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்று பின்புறத்தில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை போன்றதாக மேம்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, சந்தையில் உள்ள X440 பைக்கின் அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களுடன் கூடுதலாக சில மாற்றங்களை பெற்றுள்ளது.
Harley-Davidson X440 T
இந்த பைக்கில் தொடர்ந்து 440cc ஆயில் கூல்டு என்ஜின் லாங் ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டு 6000 rpm-ல் 27 bhp பவர், 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில், இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய மாற்றங்களாக ரைட் பை வயருடன், டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டு பின்புற ஏபிஎஸ் சுவிட்சபிள் முறையில் வழங்கப்பட்டிருப்பதுடன், கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோலும் சுவிட்சபிள் முறையில் வழங்கப்பட்டு தேவைப்பட்டால் ஆன் செய்துக் கொள்ளலாம்.
கூடுதலாக Road மற்றும் Rain என இரு விதமான ரைடிங் மோடுகளுடன் சேர்க்கப்பட்டு பின்புறத்தில் மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட பகுதியுடன், கூடுதலாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹேண்டில் பாரின் இறுதியில் மிரர் கொடுக்கப்பட்டுள்ளது. பேனிக் பிரேக் அலர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது.

புதிய X440 T பைக்கில் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸூடன் ப்ளூ, ரெட், வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு நிறங்களை கொண்டுள்ளது.
மற்ற மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெற்று டைமண்ட் கட் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.
3.5 இன்ச் டிஎஃப்டி கிளஸ்ட்டரின் மூலமாக பிரத்தியேக HD செயலி மூலம் நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.
Price LIst
- HD X440 T – ₹ 2,79,500
- HD X440 Vivid – ₹ 2,34,500
- HD X440 S – ₹ 2,54,500
(Ex-showroom)
இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி ஜனவரி 2026 முதல் நடைபெற உள்ளது.












