
டெஸ்டினி 125 வெற்றியை தொடர்ந்து அதனுடைய டிசைனை பின்பற்றி ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு அறிமுக சலுகையாக ரூ.72,000 முதல் ரூ.79,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
56.2 kmpl மைலேஜை வழங்கும் E20, OBD-2B ஆதரவினை பெற்ற 110.9cc பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.04hp பவர் மற்றும் 8.7Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்று ஹீரோவின் i3s (Idle Stop-Start System) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
Hero Destini 110
முழுமையான மெட்டல் பாடி கொண்டு முக்கிய அம்சமாக 110cc ஸ்கூட்டர் பிரிவில் இரு பக்கத்திலும் 12 அங்குல வீல் வழங்கப்பட்டு, அகலமான ரோடு கிரிப் பெற 100/80 பின்புற வீல் மற்றும் 90/90 முன்பக்க வீல் உள்ளது. 785 mm நீளமுள்ள இருக்கை பெற்று இந்த பிரிவிலேயே மிக நீளமானதாக விளங்குகின்ற காரணத்தால் அமர்ந்திருப்பவருக்கும் சிறந்த சௌகரியத்தை வழங்கும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் 130 மிமீ டிரம் அல்லது 190 மிமீ டிஸ்க் ஆப்ஷனுடன் பின்புறத்தில் பொதுவாக 130மிமீ டிரம் பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் அனலாக் முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு,முன்புற அப்ரானில் க்ளோவ் பாக்ஸ் மற்றும் பூட்ஸ்பேசில் விளக்கு மற்றும் மொபைல் போனுக்கான யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளது.
பலருக்கும் பிடித்தமான நியோ ரெட்ரோ டிசைனை கொண்டுள்ள டெஸ்டினி 110 முந்தைய டெஸ்டினி 125 போல அமைந்துள்ள நிலையில், இரவில் சிறப்பான வெளிச்சத்தை பெற எல்இடி புராஜெக்ட்ர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில் விளக்கினை பெற்றுள்ளது.
ZX வேரியண்டில் டிஸ்க் பிரேக்குடன், பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் சிரமத்தை எர்கொள்ளாமல் சாய்வாக அமர்ந்து கொள்ள பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டு அக்வா கிரே, ப்ளூ மற்றும் சிவப்பு நிறத்தை பெற்றுள்ளது. VX வேரியண்ட் டிரம் பிரேக்குடன் மேட் ஸ்டீல் கிரே, ப்ளூ மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது.
- VX – Cast Drum: ₹72,000
- ZX – Cast Disc: ₹79,000
(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).
குறிப்பாக, புதிய ஹீரோ டெஸ்டினி 110 மாடலுக்கு போட்டியாக பிரசத்தி பெற்ற ஆக்டிவா 110 மற்றும் ஜூபிடர் 110 உள்ளது.