ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஷைன் 100 அடிப்படையில் மேம்பட்ட ஸ்டைலிங் பெற்று சிறப்பான கம்யூட்டர் பயணத்துக்கு ஏற்ற ஷைன் 100 டீலக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் துவங்குகின்றது.
Honda Shine 100 DX
தொடர்ந்து 98.98cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சினை ஷைன் 100 பைக்கிலிருந்து பகிர்ந்து கொள்ளுகின்ற ஷைன் 100 டிஎக்ஸில் 7.61 hp குதிரைத்திறன் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
டைமண்ட் ஃபிரேம் சேஸிஸ் உள்ள இந்த மாடலின் பெரும்பாலான அடிப்படை நுட்பங்களை ஷைன்100ல் இருந்து பெற்றுக் கொள்ளுவதனால் இரு பக்கத்திலும் 17 அங்குல வீல் பெற்று டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டு பெரிய பெட்ரோல் டேங்க் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள் டிஜிட்டல் கிளஸ்ட்டரை ஷைன் 125லிருந்து பெற்றுள்ளது.
மற்றபடி, கொடுக்கப்படுள்ள பாடி கிராபிக்ஸ் கவர்ச்சிகரமாக அமைந்து பேர்ல் இக்னியஸ் கருப்பு, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஜெனி கிரே மெட்டாலிக் என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த பைக்கிற்கு போட்டியாக சமீபத்தில் ஹீரோ வெளியிட்ட Hf டீலக்ஸ் புரோ தவிர ஸ்பிளெண்டர்+ , டிவிஎஸ் ஸ்போர்ட் உள்ளிட்டவற்றுடன் பஜாஜ் பிளாட்டினா