சமீபத்தில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 அடிப்படையிலான கிளாசிக் 650 பைக்கின் படங்கள் கசிந்துள்ளது. பிரசத்தி பெற்ற ட்வீன்ஸ் 650 மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 மாடல்களில் உள்ள என்ஜின் பெற்றதாக உள்ளது.
648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 Hp குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 RPM சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 RPM சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
Royal Enfield Classic 650
தோற்ற அமைப்பில் ஏறக்குறைய விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையிலான ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, ஸ்போக் வீல் உட்பட அனைத்து விதமான பாகங்ளும் கிளாசிக் 650 பைக்கில் சிறிய 350 மாடலை போலவே தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பருடன் ஸ்பீளிட் சீட் ஆனது வழங்கப்பட்டு, இரு பக்கத்திலும் டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.
பல்வேறு மாடல்களை 450சிசி பிரிவில் ராயல் என்ஃபீல்டு சோதனை செய்து வரும் நிலையில் கிளாசிக் 650, புல்லட் 350, புல்லட் 650 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.