இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரை தினசரி பயன்பாட்டிற்கு மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்ற சிறந்த அனுபவம் தருகின்ற பயணம் மற்றும் அதிகப்படியான சுமைகளை எடுத்துச் செல்ல மற்றும் இட வசதி சார்ந்த அம்சங்களை பெறுவதற்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.
டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ரிஸ்ட்டா, பஜாஜ் சேட்டக், ஓலா எஸ் ஒன் எக்ஸ், மற்றும் ஆம்பியர் நெக்ஸஸ் ஆகியவை உள்ளடக்கிய சிறப்பு ஒப்பிட்டு பார்வையாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாடல்களில் சிறந்த மாடல்களில் இங்கே வகைப்படுத்தி உள்ளோம். இவற்றில் உங்களுக்கான விருப்பம் இது என்பதை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பட்ஜெட்
பொதுவாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களை விட 60 % முதல் 70% வரை கூடுதலான விலையில் தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சிறப்பான ரேஞ்ச் மற்றும் கூடுதலான வசதி வழங்குகின்ற மாடல்கள் இன்னும் சற்று கூடுதலான விலையில் கிடைக்கின்றன.
இந்திய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை பொறுத்த வரை 1 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக துவங்கி ரூ.1.80 லட்சம் வரையில் பல்வேறு மாடல்கள் கிடைக்கின்றன.
ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்ற பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் 50-65 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குவதே மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்திருக்கின்றன ஏனென்றால் அவற்றின் பேட்டரியின் திறன் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே நாம் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூடுதலான விலையில் உள்ள பேட்டரி மின்சார ஸ்கூட்டர் தேர்ந்தெடுக்கும் பொழுது சராசரியாக உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 80 முதல் 140 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் வரை கிடைக்கின்றன.
நாம் சொல்லுகின்ற ரேஞ்ச் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் பெட்ரோல் மாடல் எவ்வாறு மைலேஜ் மாறுபடுகிறதோ, அதே போல வேகம் மற்றும் அதனுடைய செயல் திறன் மற்றும் முறையான பராமரிப்பு, டயர் பிரெஷர் பராமரிப்பு என பல்வேறு காரணங்களால் எவ்வாறு மைலேஜ் மாறும்.
அதே போல தான் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், நாம் எடையை அதிகரிக்கும் பொழுது அல்லது நாம் வேகத்தை அதிகரிக்கும் போது என ஈக்கோ மோடு எனப்படுகின்ற குறைந்த வேகத்தில் இயங்கும் பொழுது தான் இந்த பொதுவாக நாம் சொல்லுகின்ற டாப் ரேன்ஜ் அதிகபட்சமாக கிடைக்கின்றது. மற்றபடி, அதிகபட்ச வேகத்தில் நாம் பயணிக்கும் போதெல்லாம் அவ்வளவு பெரிய ரேஞ்ச் ஆனது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தருவதில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இ-ஸ்கூட்டரின் ரேஞ்ச்
நாம் ஒப்பீட்டுக்காக எடுத்துக் கொண்டுள்ள ஏத்தர் ரிஸ்ட்டா, பஜாஜ் சேட்டக், ஓலா S1X, டிவிஎஸ் ஐகியூப் மற்றும் ஆம்பியர் நெக்ஸஸ் ஆகிய மாடல்களின் அட்டவணை வாரியாக அதனுடைய ரேஞ்ச் மற்றும் பேட்டரியின் திறன் மற்றும் அதிகபட்ச வேகம் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி சார்ஜிங் நேரம் உள்ளிட்டவற்றையெல்லாம் இங்கு வழங்கியுள்ளோம்.
தயாரிப்பாளர் | பேட்டரி, ரேஞ்ச் |
Ather Rizta (S,Z) | பேட்டரி – 2.9 Kwh, IDC ரேஞ்ச் – 123km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-100 km, அதிகட்ச வேகம் – 80km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 8 hr 30 min |
Ather Rizta Z | பேட்டரி – 3.7 Kwh, IDC ரேஞ்ச் – 160km/charge , உண்மையான ரேஞ்ச் – 125-135 km, அதிகட்ச வேகம் – 80km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 10 min |
Ampere Nexus | பேட்டரி – 3 Kwh, CVMR ரேஞ்ச் – 136km/charge , உண்மையான ரேஞ்ச் – 95-105 km, அதிகட்ச வேகம் – 93km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 3 hr 22 min |
Ola S1X 3kwh | பேட்டரி – 3 Kwh, IDC ரேஞ்ச் – 143km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 90km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min |
Ola S1X 4kwh | பேட்டரி – 4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 90km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 50 min |
2024 Bajaj Chetak Urbane | பேட்டரி – 2.9 Kwh, IDC ரேஞ்ச் – 113km/charge , உண்மையான ரேஞ்ச் – 95-100 km, அதிகட்ச வேகம் – 73km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 30 min |
2024 Bajaj Chetak Premium | பேட்டரி – 3.2 Kwh, IDC ரேஞ்ச் – 126km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 73km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 4 hr 50 min |
TVS iqube | பேட்டரி – 3.04 Kwh, IDC ரேஞ்ச் – 100km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-95 km, அதிகட்ச வேகம் – 78km/hr சார்ஜிங் நேரம் (0-80%) – 4 hr 48 min |
Ola S1 air | பேட்டரி – 3 Kwh, IDC ரேஞ்ச் – 151km/charge , உண்மையான ரேஞ்ச் – 120-130 km, அதிகட்ச வேகம் – 90km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 5 hr |
மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ஏத்தரின் ரிஸ்டாவின் இருக்கை நீளம் மற்றும் அகலம் அதிகமாக இருப்பதுடன், கொள்ளளவு முன்புறத்தில் 22 லிட்டர் ஃபர்ன்க் உட்பட இருக்கை அடிப்பகுதியில் 34 லிட்டர் என ஒட்டுமொத்தமாக 56 லிட்டர் கொள்ளளவு பெற்றுள்ளது.
மணிக்கு 93 கிமீ அதிகபட்ச வேகத்தை ஆம்பியர் நெக்ஸஸ் எட்டுகின்றது. 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை வாரண்டி வழங்குகின்ற ஓலா ரேஞ்ச் தொடர்பான செயல்பாட்டில் ஓலா எஸ்1எக்ஸ் மற்றும் எஸ்1 ஏர் ஸ்கூட்டர்கள் முன்னிலை வகிக்கின்றது. அதிகம் விற்பனை எண்ணிக்கை பதிவு செய்வதுடன் சிறப்பான ரேன்ஜை டிவிஎஸ் ஐக்யூப் வழங்குகின்றது. அடுத்து, மெட்டல் பாடி பெற்ற பஜாஜின் சேட்டக் ரெட்ரோ ஸ்டைலை பெற்றுள்ளது.
ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ஒப்பீடு
பேட்டரியின் ரேஞ்ச் உட்பட பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புதிய EMPS2024 மானியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை வழங்கப்பட்டுள்ளது.
e-Scooter | Price |
Ather Rizta | ₹ 1,19,532- ₹1,54,543 |
Ampere Nexus | ₹ 1,18,901- ₹1,28,985 |
Ola S1X | ₹ 81,787 – ₹ 1,12,500 |
Bajaj Chetak | ₹ 1,34,067 – ₹ 1,57,124 |
Ola S1 Air | ₹ 1,21,056 |
TVS iQube | ₹ 1,56,137 – ₹ 1,66,057 |
(கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல்)