ஓலா S1 Air vs S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒப்பீடு, எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்.?

ola s1 air escooter price

ஓலா எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியிட்டுள்ள S1 Air vs S1 pro என இரண்டு ஸ்கூட்டரின் பெர்ஃபாமென்ஸ், ரேஞ்சு உள்ளிட்ட அம்சங்களை ஒப்பீடு செய்து எந்த ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம் என அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது.

ஏற்கனவே, இந்நிறுவனம் விற்பனை செய்து வந்த 3Kwh எஸ்1 மாடலை நீக்கியுள்ளது. தற்பொழுது எஸ் 1 ஏர் மற்றும் எஸ் 1 புரோ எட இரண்டை மட்டும் விற்பனை செய்து வருகின்றது. எஸ்1 புரோ கூடுதல் வசதிகள் மற்றும் ரேஞ்சு கொண்டதாக உள்ளது.

Ola S1 Air vs S1 Pro

அறிமுக சலுகையாக ரூ.1.09,999 விலையில் (ஆகஸ்ட் 15க்கு பிறகு ரூ.1,19,999) கிடைக்கின்ற ஓலா எஸ்1 ஏர் பட்ஜெட் விலையில் அமைந்துள்ளதால் அதிகப்படியான வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. டாப் எஸ்1 புரோ ஸ்கூட்டரின் விலை ரூ. 1,39,999 ஆக உள்ளது.

தோற்ற அமைப்பில் இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைந்தாலும், சில மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் முக்கியமான மாற்றத்தை பெற்றுள்ளது. அவற்றின் விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

ola-s1-air-vs-s1-pro

SpecsOla S1 AirOla S1 Pro
மோட்டார் வகைMid Drive IPMHub
பேட்டரி3Kwh4kwh
பவர்
2.7 Kw/ 4.5kW
5.5Kw / 8.5kW
டார்க்58 NM58 NM
ரேஞ்சு (IDC)125 Km/charge181 Km/charge
ரைடிங் ரேஞ்சு90-100 Km/charge130-155 Km/charge
அதிகபட்ச வேகம்90 Kmph116 Kmph
சார்ஜிங் நேரம்5 hrs6 hrs 30 mins
ரைடிங் மோடுEco, Normal & SportsEco, Normal, Sports, Hyper

எஸ் 1 ஏர் ஆனது 3Kwh லித்தியம் பேட்டரி ஆனது முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 5 மணி நேரம் வரை தேவைப்படும். 750 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது. முழுமையாக சார்ஜ் செய்தால் IDC முறைப்படி 125 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கலாம்.

மற்றபடி, எஸ்1 புரோ வேரியண்டில் அதிகபட்சமாக 6.30 மணி நேரம் வரை தேவைப்படும். 750 kW போர்டெபிள் சார்ஜ் ஆனது வழங்கப்படுகின்றது. முழுமையாக சார்ஜ் செய்தால் IDC முறைப்படி 181 கிமீ ரேஞ்சு ஆனது ஈக்கோ மோடில் வழங்கலாம். கூடுதலாக இந்த ஸ்கூட்டரில் ஹைப்பர் மோட் இடம் பெற்றுள்ளது.

ola-s1-air-vs-s1-pro side

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

SpecsOla S1 AirOla S1 pro
முன் சஸ்பென்ஷன்டெலிஸ்கோபிக் ஒற்றை ஃபோர்க்
பின் சஸ்பென்ஷன்ட்வீன் ஷாக் அப்சார்பர்மோனோஷாக்
பிரேக்கிங் சிஸ்டம்CBSCBS
முன்பக்க பிரேக்130 mm டிரம்220 mm டிஸ்க்
பின்பக்க பிரேக்130 mm டிரம்180 mm டிஸ்க்
வீல் F/R–  ட்யூப்லெஸ்110/70 – R12 ட்யூப்லெஸ்

ஓலா எஸ்1 புரோ மாடலில் ஒற்றை ஃபோர்க் ஆனது முன்புறத்தில் உள்ள நிலையில் எஸ்1 ஏர் மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக்குடன் சிபிஎஸ் உள்ளது. எஸ்1 புரோ மாடலில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் சிபிஎஸ் உள்ளது.

பரிமாணங்கள் ஒப்பீடு

SpecsOla S1 AirOla S1 Pro
எடை108 Kg121 Kg
இருக்கை உயரம்792mm792mm
கிரவுண்ட் கிளியரன்ஸ்163mm165mm
நீளம்1,859mm1,859mm
அகலம்688mm713mm
உயரம்1,166mm1,161mm
வீல் பேஸ்1,359mm1,359mm
சேசிஸ்ட்யூப்லெர்ட்யூப்லெர்

இரண்டு மாடல்களும் 1359 mm வீல்பேஸ் கொண்டு கிரவுண்ட் கிளியரண்ஸ் ஆனது 165 மிமீ கொண்டதாக எஸ்1 ப்ரோ விளங்குகின்றது. இரண்டு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசம் 13 கிலோ ஆகும்.

பொதுவாக இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களும் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், ரிவர்ஸ் மோட், 7 அங்குல கிளஸ்ட்டர் நேவிகேஷன் வசதி, ரிமோட் பூட் லாக், க்ரூஸ் கண்ட்ரோல், OTA மேம்பாடு, முன்கூட்டிய சர்வீஸ் தொடர்பான அறிவிப்புகள், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி என பலவற்றை பெற்றுள்ளது. எஸ்1 புரோ பூட் ஸ்பேஸ் 36 லிட்டரும், எஸ்1 ஏர் பூட் ஸ்பேஸ் 34 லிட்டரும் கொண்டுள்ளது.

ola-s1-air-vs-s1-pro

விலை ஒப்பீடு

ஓலாவின் இரு மாடல்களும் வெவ்வேறு விதமான பேட்டரி மற்றும் ரேஞ்சு கொண்டிருந்தாலும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாகவும், மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் சிறிய மாறுதலை பெற்று பலரும் பெரிதும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

ModelEx-Showroom  Tamil Nadu
Ola S1 AirRs.1,09,999 (Aug 15 – rs.1,19,999)
Ola S1 ProRs.1,39,999

Ola S1 Air Vs S1 Pro On-road Price in Tamil Nadu

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் போட்டியாக, டிவிஎஸ் ஐக்யூப், விடா வி1, ஏதெர் 450X, புதிதா வரவிருக்கும் ஏதெர் 450S போன்ற மாடல்களுடன் பல்வேறு போட்டியாளர்கள் இந்த ஸ்கூட்டர்களுக்கு சவாலாக அமைந்துள்ளன.

ModelOn-Road  Tamil Nadu
Ola S1 AirRs. 1,22,457 (Rs.1,34,350 from Aug 15)
Ola S1 ProRs.1,56,560

இரண்டு மாடல்களும் மிக சிறப்பான வரவேற்பினை கொண்டுள்ளதால் உங்களின் தினசரி பயண தேவைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க அனைத்து முக்கிய அம்சங்களையும் பட்டியலாக தொகுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *